Published : 01 Feb 2020 03:04 PM
Last Updated : 01 Feb 2020 03:04 PM
பழநி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பழநியில் தைப் பூசத் திருவிழா 08.02.2020 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவினை ஒட்டி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் அதனைச் சார்ந்த பகுதிகளிலிருந்தும் பழனிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை முன்னிட்டு, "பக்தர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக்கழகத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பழநிக்கும் அங்கிருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் 05.02.2020 முதல் 09.02.2020 வரை 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் தேவைக்கேற்ப அதிக பேருந்துகளும் போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
பழநி செல்லும் பக்தர்களின் உடனடித் தொடர்புக்கு திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தேனி, கரூர், நத்தம் ஆகிய பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு உதவி வழி காட்டவும் உரிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) நிர்வாக இயக்குநர் ஏ.முருகேசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT