Published : 01 Feb 2020 11:14 AM
Last Updated : 01 Feb 2020 11:14 AM
மதுரை - போடி இடையே 90 கி.மீ. நீள மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் சரக்கு போக்குவரத்தை மனதில் வைத்தே தொடங்கப்பட்டது.
குறிப்பாக, கேரள - தமிழக எல்லைப் பகுதியான தேனி, போடி, கூடலூர் பகுதிகளில் விளையும் ஏலக்காய், மிளகு, தேயிலை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை ரயில் மூலம் மதுரைக்குக் கொண்டு வந்து, பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு அனுப்ப இந்த ரயில் போக்குவரத்து விவசாயிகள், வியாபாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
இந்நிலையில், மதுரை - போடி மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் 2010-ம் ஆண்டில் தொடங் கியது. அகல ரயில்பாதை பணிகளை 2015-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றி ரயில் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், பணிகள் திட்டமிட்டபடி முடியவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி உள்ளது.
இத்திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.180 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி ரயில் போக்குவரத்தை தொடங்கவில்லை.
மக்களவை உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ரவீந்திரநாத்குமார் ஆகி யோர் மக்களவையில் இத்திட்டம் பற்றி வலியுறுத்திய பிறகே பணிகள் வேகமெடுத்தன. மதுரை- போடி வரை 8 பெரிய பாலங்கள் உட்பட 190-க்கும் மேற்பட்ட பாலங்களும், வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆட்சியர் அலுவலகம், தேனி, போடி ரயில் நிலையங்களும் ஏற் படுத்தப்பட்டுள்ளன.
தற்போது முதல்கட்டமாக மதுரை- உசி லம்பட்டி இடையே 37 கி.மீ. ரயில் பாதை பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு ரயில் வெள்ளோட்டம் நடந்துள்ளது. இந் நிலையில், இந்த மார்க்கத்தில் ரயிலை இயக்குவது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மதுரை- உசிலம்பட்டி இடையே ரயிலை இயக்கினாலும் மக்களுக்கு பெரிதும் நன்மை கிடையாது. ரயில்வேக்கும் பெரிய அளவில் வருவாய் கிடைக்கப்போவதில்லை. மதுரை- போடி இடையே ரயில் போக் குவரத்து தொடங்கினால் மட்டுமே பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
ரயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மதுரை, தேனி பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறியது: மக்களவையில் மதுரை- போடி அகல ரயில் பாதைத் திட்டத்தை துரிதப்படுத்த வலியுறுத்தினேன். முதலில் மதுரை- உசிலம்பட்டி வரை தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.
உசிலம்பட்டி- போடி இடையேயான பணிகளை 4 மாதத்தில் நிறைவு செய்வோம் என ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை வலியுறுத்துவோம்.'' என்றார்.
ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, ‘‘உசிலம்பட்டி- போடி வரையிலான பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க திட்ட மிட்டுள்ளோம். போதுமான நிதி உள்ளது. பணிகளை மேற்கொள்ளும்போதுதான் தேவைப்படும் நிதி பற்றி தெரியும். எப்படியும் 2020-ம் ஆண்டு இறுதிக்குள் மதுரை- போடி இடையே ரயில் போக்குவரத்து தொடங் கப்படும்.’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT