Last Updated : 31 Jan, 2020 09:52 AM

 

Published : 31 Jan 2020 09:52 AM
Last Updated : 31 Jan 2020 09:52 AM

வாழப்பாடி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3.58 லட்சம் கிலோ பருத்தி ரூ.2.15 கோடிக்கு விற்பனை

வாழப்பாடி சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தின்போது, விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தி மூட்டைகள் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் பருத்தி அறுவடை பணி தொடங்கியுள்ள நிலையில், வாழப்பாடி சேலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3.58 லட்சம் கிலோ பருத்தி ஏலம் மூலம் ரூ.2.15 கோடிக்கு விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ததால், விவசாயிகள் பரவலாக பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது, பல இடங்களில் பருத்தி அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, வாழப்பாடி சேலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் பருத்தி ஏலம் விற்பனை தொடங்கியது. இங்கு வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் விற்பனை நடைபெறுகிறது. இங்கு ஆத்தூர், தம்மம்பட்டி, வாழப்பாடி ஆகிய ஊர்களில் இருந்தும், அண்டை மாவட்டங்களான பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு ஆத்தூர், சேலம், கோவை, திருப்பூர், அல்லூர், திண்டுக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட ஊர்களில் இருந்து பதிவு பெற்ற வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

வாழப்பாடி சங்கத்தில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி 500 மூட்டையும், டிசம்பர் 25-ம் தேதி 650 மூட்டையும், ஜனவரி 1-ம் தேதி 1,250 மூட்டையும், ஜனவரி 8-ம் தேதி 3,300 மூட்டையும், ஜனவரி 22-ம் தேதி 4,200 மூட்டையும், நேற்று முன்தினம் (29-ம் தேதி) அதிகபட்சமாக 9,300 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.

இதனால், சங்க வளாகம் முழுவதும் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பு பருத்தி அறுவடை சீசனில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் டிசிஹெச் ரகம் 4,100 மூட்டைகள், ஆர்சிஹெச் 4,700 மூட்டை கள் உள்ளிட்ட மொத்தம் 9,300 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. மொத்தம் 1,189 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியில், 3,58,120 கிலோ ரூ.2.15 கோடிக்கு விற்பனையானது. இவற்றை 62 வியாபாரிகள் வாங்கிச் செ ன்றனர். மேலும், கடந்த வாரத்தைவிட மூட்டைக்கு சராசரியாக ரூ.300 அதிகம் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x