Published : 29 Jan 2020 09:20 AM
Last Updated : 29 Jan 2020 09:20 AM

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- பின்னணி என்ன?

விழுப்புரம்

விழுப்புரம் வடக்கு மாவட்டசெயலாளராகவும், அமைச்சராக வும் இருந்த சி.வி. சண்முகம் மீது தலை மைக்கு புகார்கள் சென்றதால் கடந்த 2014-ம் ஆண்டு கட்சிப் பதவிமற்றும் அமைச்சர் பதவியும்பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, மாவட்ட மருத்துவரணி செயலாளராக இருந்த டாக்டர் லட்சு மணன் மாவட்ட செயலாளரானார். இதைத்தொடர்ந்து லட்சுமணனை ராஜ்ய சபா எம்பியாகவும் தலைமை அங்கீகரித்ததால் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை அவர் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து சி.வி. சண்முகத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு, ஏற்கெனவே அவரால் கட்சியில் ஓரங்கட் டப்பட்டவர்களுக்கு லட்சுமணன் கட்சிப் பொறுப்பு வழங்கினார். பதவி ஆசையில் லட்சுமணனிடம் சரண்டர் ஆன சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களையும் தன் வசப் படுத்திக்கொண்டார். அதையும் தாண்டி சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களாகவே இருப்போம் என முரண்டு பிடித்த கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, வல்லம் ஒன்றிய செயலாளர் அண் ணாதுரை, மறைந்த செஞ்சி நகர செயலார் சுரேஷ்பாபு, திண்டிவனம் நகர செயலாளர் வெங்கடேசன் உள்பட சண்முகத்தின் நிரந்தர ஆத ரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். வேறு எந்தப் பதவியிலும் அவரது ஆதரவாளர்கள் இல்லாதபடிலட்சுமணன் கட்சியை தன் கட்டுப் பாட்டில் வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் அமைப்பு செய லாளராக இருந்த சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட செயலாளராக இருந்தலட்சுமணன் அமைப்பு செயலாளரா கவும் கட்சித் தலைமையால் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து லட்சும ணின் ஆதரவாளர்களாக இருந் தவர்களில் பெரும்பாலானோர் சண்முகத்திடம் தஞ்சமடைந்தனர்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகபாணியில் அதிமுகவும் ஒன்றியங்களை இரண்டாக பிரித்து நிர்வாகி கள் பட்டியல் அண்மையில் அதிமுகவின் ஆதரவு நாளேட்டில் வெளியா னது. இந்த நிர்வாகிகள் பட்டியலில் லட்சுமணனின் ஆதரவாளர்களாக இருந்த ராம சரவணன், மணவா ளன் உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்டு, அப்பதவிகள் சண்முகத் தின் ஆதரவாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

லட்சுமணனுக்கு வாய்ப்பில்லை

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “வரு கின்ற உள்ளாட்சித் தேர்தலில் லட்சுமணன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என்றும், ஏற்கெனவே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி லட்சுமணனுக்கு ஒதுக்கப்படும் என்று சொல்லப் பட்டு வந்ததும் மாற்றப்பட்டு, சி.வி. சண் முகத்தின் நிரந்தர ஆதரவாளரான கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபுவுக்கு வழங்கவும் வாய்ப்புகள் உள்ளது. அன்று லட்சுமணன் செய்ததை இன்று சி.வி. சண்முகம் செய்துள்ளார்.

இதில் தனக்கென எந்த ஆதர வாளர்களையும் உருவாக்கிக் கொள்ளாத கட்சியின் சீனியரானமுன்னாள் எம்பி சேவல் ஏழுமலையிடம் இருந்த மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலா ளர் பதவிபறிக்கப்பட்டு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தற்போது அதுவும் பறிக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட ஒன்றியங் களில் ஒன்றான மேல்மலைய னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x