Published : 11 Aug 2015 10:37 AM
Last Updated : 11 Aug 2015 10:37 AM
கூடுதல் செலவு இல்லாததால் சாதாரண மக்களும் எளிதாக மக்கள் நீதிமன்றம் (லோக்-அதாலத்) சென்று தங்கள் வழக்குகளை சமாதான அடிப்படையில் முடிக்கின்றனர். சமரசம் என்ற மற்றொரு மாற்றுமுறை தீர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் அதற்கும் மவுசு அதிகரித்துள்ளது.
‘சாட்சிக்காரன் காலில் விழு வதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்ற பழமொழி பலருக்கும் தெரிந்திருக்கும். சமா தானத்தை வலியுறுத்தும் இப்பழ மொழியை வழக்காடிகள் ஏராள மானோர் இப்போது புரிந்து கொண் டுள்ளனர். அதனால்தான், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதி மன்றங்களில் நடத்தப்படும் மக்கள் நீதிமன்றத்தை நோக்கி சாதாரண மக்கள் படையெடுக்கின்றனர்.
மக்கள் நீதிமன்றம்
உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ், நீதிமன்றம் தன்னிடம் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை சமரசமாக பேசி முடிப்பதற்கு வழக்காடிகளின் மனு அடிப்படையிலோ தன்னிச்சை யாகவோ சமாதான முறையில் தீர்வு காண மக்கள் நீதிமன்றத்துக்கு அனுப்பலாம். சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19-ன் படி மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர்.
மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன் றத்தின் நிலுவை வழக்குகள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வருவதற்கு முந்தைய நிலையில் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கித் தாவா, தொலைபேசி மற்றும் செல்போன் நிறுவன விவகாரங்கள், ஓய்வூதியப் பிரச்சினைகள், காசோலை வழக்கு கள் போன்றவை சமாதானமாகப் பேசி தீர்வு காணப்படுகின்றன.
மக்கள் நீதிமன்றத் தீர்ப்பு, நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒப்பானது என்பதால் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இதன் தீர்ப்பை சட்டப்படி நிறைவேற்ற முடியும். மக்கள் நீதிமன்றத்துக்கு தனியாக கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஏற்கெனவே நீதி மன்றக் கட்டணம் செலுத்தி வழக்கு தொடர்ந்திருந்தால், அக்கட்டணம் திருப்பித் தரப்படும்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக் கையைக் குறைப்பதில் மக்கள் நீதி மன்றம் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த 8-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 23 ஆயிரம் வழக்குகள் முடிக்கப் பட்டு, ரூ.308 கோடி சம்பந்தப்பட்ட வர்களுக்கு தீர்வுத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமரச தீர்வு முறை
வணிகம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான விஷயங்கள், சொத்து பிரச்சினை, பங்குதாரர்கள் தகராறு, திருமணம் மற்றும் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள், குடும்ப வர்த்தகப் பிரச்சினைகள் போன்றவை மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களில் தீர்வு காணப்படு கின்றன. சமரசத் தீர்வை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் ஆர்.எம்.டி. டீக்கா ராமன் கூறும்போது, “உயர் நீதிமன்ற வளாகத்தில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் நாடு சமரச மையம் தொடங்கப் பட்டது. அப்போது வாதி, பிரதிவாதி களுக்கு இடையே சமரச பேச்சு நடத்துவதற்காக 52 பயிற்சி பெற்ற மத்தியஸ்தர்கள் இருந்தனர்.
இம்மையத்துக்கு வரும் வழக்குகள் அதிகரித்திருப்பதால், மத்தியஸ்தர்கள் எண்ணிக்கையும் 944 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமரச மையத்தில் 2012-ம் ஆண்டில் 517 வழக்குகளும், 2013-ம் ஆண்டில் 799 வழக்குகளும், 2014-ம் ஆண்டில் 970 வழக்குகளும் சமரச தீர்வு மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT