Published : 26 Aug 2015 03:59 PM
Last Updated : 26 Aug 2015 03:59 PM
சோலைக்காடுகளில் காட்டுத் தீயில் இருந்து பறவை, பூச்சிகளை பாதுகாக்கும் நீலகிரி ரோடோ டென்ரான் என்ற அபூர்வ வகை மரங்கள், தற்போது அந்நிய மரங்களால் வேகமாக அழிந்து வருவதாக தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அகன்ற இலைகளையுடைய குட்டையான மரங்கள், பெரும் பான்மை பகுதியை புல்வெளியாகக் கொண்ட வனப்பகுதிகள் சோலைக் காடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வகை காடுகள், கடல்மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்துக்கு அதிகமான தமிழக, கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சோலைக்காடுகளில் குறிஞ்சி தாவர வகைகள், ரோடோ டென் ரான், இம்பேஸியன்ஸ், ரோடோ மிர்டஸ், நாவல் உள்ளிட்ட அரியவகை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வகை மரங்கள், சோலைக்காடுகளில் மட்டுமே வளரக்கூடிய தகவமைப்பைப் பெற்றவை.
இம்மரங்களில் ரோடோ டென்ரான் மரங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. இவை குட்டையான தண்டுப்பகுதியுடன் தடித்த தோல் போன்ற இலை அமைப்புகளுடன் அழகிய வண்ணவண்ண பூக் களைக் கொண்டவை. இவை ஆசியாவிலும், அரிதாக வடக்கு அமெரிக்காவிலும் பரவிக் காணப் படுகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளில் ரோடோ டென்ரான் மரங்கள் காணப்படுவதாக தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரோடோ டென்ரான் மரங்களில் நீலகிரி ரோடோ டென்ரான் மரங் கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சோலைக்காடுகளில் காணப்படும் இவ்வகை மரங்கள், தற்போது பைன், யூகலிப்டஸ், வாட்டில் உள்ளிட்ட அந்நிய மரங்களின் வரவால் வேகமாக அழிந்துவரு வதாக தாவரவியல் ஆராய்ச்சி யாளர்கள் கவலை தெரிவித்துள் ளனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி முதல் மகாராஷ்டிரம் வரை இவ்வகை மரங்களை பற்றி ஆய்வு செய்த திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக தாவரவியல் ஆராய்ச்சியாளர் ராமசுப்பு கூறியதாவது:
அலிஞ்சி மற்றும் காட்டுப் பூவரசு என வழக்கு பெயர்களைக் கொண்டும் இவ்வகை மரங்கள் அழைக்கப்படுகின்றன. இமய மலைக் காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இவை 13-24 டிகிரி செல்சியஸ் அளவு தட்பவெப்பம் நிறைந்த சோலைக்காடுகளில் மட்டுமே வளரக்கூடியவை. சோலைக்காடுகளில் வாழும் பெரும்பான்மை பறவைகளின் உணவுத்தேவை இதன் பூக்களில் இருந்து வடியும் தேன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. செதில் போன்ற இம்மரப்பட்டைகள் பல் வேறு வகையான பூச்சிகளின் உறைவிடமாக திகழ்கின்றன. வண் ணத்து பூச்சிகளின் புழுக்களுக்கு உணவாக இதன் இலைகள் பயன்படுகின்றன. தமிழகத்தில் கொடைக்கானல், ஆனைமலை, அகஸ்தியர் மலை, நீலகிரி மலை, ஆனைமுடி, அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற இடங் களில் மட்டுமே இந்த மரங்கள் காணப்படுகின்றன. கொடைக் கானலை பொருத்தமட்டில் இவ்வகை மரங்கள் பரவலாக வட்டக்கானல், மதிகெட்டான் சோலை, கூக்கால், பாம்பார் சோலைக்காடுகளில் பரவிக் காணப்படுகின்றன.
தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் இம்மரங்கள் விதை மூலம் பரவும் முளைப்புத்திறன் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், இவை தற்போது இயற்கையாக காடுகளில் பரவமுடியவில்லை. இதன் விதைகள் சீராக பரவினாலும், யூகலிப்டஸ், வாட்டில், பைன் உள்ளிட்ட அந்நிய மரங்களில் இருந்து விழும் இலைகளின் வேதிப்பொருளினால் விதைகள் முளைக்க முடியாமல் அழிகின்றன.
பொதுவாக சோலைக்காடுகளில் வெயில் காலங்களில் காட்டுத்தீ இயற்கையாக பரவும். இத்தீயில் இருந்து இம்மரங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வெளிப்பகுதியில் துகள் போன்ற தீப்பற்ற இயலாத மரப் பட்டைகளையும், நடுப்பகுதியில் நீர்ச்சத்து கொண்ட தாவர திசுக் களையும், உள் அடுக்கில் கடின மான செல்களைக் கொண்ட திசுக்களையும் கொண்டுள்ளன. காட்டுத்தீயைத் தாங்கி வளரும் திறனைக் கொண்டதால் இம்மரங் களில் வாழும் பறவைகள், பூச்சிகளும் பாதுகாக்கப்படுகின் றன. அந்நிய மரங்களை அழித்தால் இந்த நீலகிரி ரோடோ டென்ரான் போன்ற மரங்களையும் பாதுகாக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT