Published : 14 Jan 2020 08:30 PM
Last Updated : 14 Jan 2020 08:30 PM

மதுரை அரசு மருத்துவமனையில் 13 வயது சிறுமி இதயத்தில் இருந்த 150 கிராம் கட்டி அகற்றம்: இந்தியாவில் அகற்றப்பட்டதில் இதுவே மிகப்பெரியது

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு இதயத்தில் இருந்த 150 கிராம் கட்டியை அகற்றப்பட்டது. இதயத்திலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்ட கட்டிகளில் இதுவே இந்தியாவிலே மிகப்பெரிய கட்டி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராஜபாளையம் சர்ச் தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளி ப.குணசேகரன். இவரது 13 வயது மகள் சீதா லெட்சுமி. மூச்சு திணறல், நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதய நெஞ்சக அறுவை சிகிச்சைத்துறை, இவரை பரிசோதனை செய்தனர். ஸ்கேனில் அவரது இதயம் முழுவதிலும் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கட்டியானது ரத்த ஓட்டத்தை தடை செய்யும் விதமாக அமைந்திருந்தது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, இதயத்திலிருந்த அந்த கட்டியை அகற்றினர். அந்த கட்டி 150 கிராம் இருந்தது. இதயத்திலிருந்து அகற்றப்பட்ட கட்டிகளுள் இந்த கட்டி இந்தியாவிலே ஒரு நோயாளிக்கு அகற்றப்பட்ட கட்டி என்று ‘டீன்’ சங்கு மணி பெருமிதம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘‘இதயத்தில் நடந்த இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அகற்றப்பட்டது. இதே கட்டியை தனியார் மருத்தவமனைகளில் அகற்றியிருந்தால் ரூ.5 லட்சம் வரை செலவாகியிருக்கும்.

இதேபோல் அரசு மருத்துவமனையில் மற்றொரு அரியவகை மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவணத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கேசவன், (35) சுவாசப்பிரச்சனை காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

5 மாதத்திற்கு முன் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு சிகிச்சையில் குணமடைந்துள்ளார். தற்போது மீண்டும் சுவாசப்பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு அதிகமான நாட்கள் செயற்கை சுவாச கருவிகள் உதவி தேவைப்பட்டது. மூச்சுக்குழாயும் பண்பட்டு சுருங்கியது.

இவருக்கு மூன்று கோணங்களில் ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் மூச்சுக்காற்று உள்ளே வெளியே செல்வதற்கு இடமில்லாமல் இருந்தது.

அதனால், மருத்துவர்கள் சுருங்கி பயண்படாதநிலையில் 3 செ.மீ, அளவிலான மூச்சுக்குழாய் அகற்றப்பட்டு மீதமுள்ள நல்லமுறையில் இயங்கி கொண்டிருந்த மூச்சுக்குழாய் பகுதிகள் இணைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது அரிய வகை மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சையாகும், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x