Published : 04 May 2014 10:29 AM
Last Updated : 04 May 2014 10:29 AM
திருச்சி பகுதிகளில் கழுதைப் பால் வியாபாரம் படுஜோராக நடைபெறு கிறது. கடலூர் மாவட்டம் தொழு துரைச் சேர்ந்த ஒரு குழுவினர் 50-க் கும் மேற்பட்ட கழுதைகளுடன் திருச்சியில் முகாமிட்டுள்ளது.
கழுதைகளுடன் தெருத் தெரு வாகச் சென்று ‘கழுதைப் பால் வாங்கலியோ... கழுதைப் பால்...’ எனக் கூவி அழைத்து, கேட்ப வர்களுக்கு அங்கேயே கறந்து கொடுக்கின்றனர். மருந்து, மாத்தி ரைதான் எல்லா வியாதிகளுக்கும் பலன ளிக்கும் என்று நம்புகின்ற நகர மக்களைவிட இவர்கள் நம்பு வது கிராமங்களில் இருந்து நகரத்துக்குப் புலம்பெயர்ந்தவர் களைத்தான்.
ஆர்வமுடன் வாங்கும் மக்கள்…
கழுதைப்பால் நோய் எதிர்ப்பு சக்திகொண்டது, மருத்துவ குணம் நிறைந்தது என்று கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்கள் வாங்குவார்கள் என்று நம்பி நகரத்துத் தெருக்களைச் சுற்றி வருகின்றனர். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பலர் கழுதையுடன் செல்பவர்களை நிறுத்தி, விலை விவரம் விசாரித்து விட்டு ஆர்வமுடன் வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்தனர்.
இதுகுறித்து கழுதைப் பால் விற்பனையில் மும்முரமாக இருந்த கணேசன் கூறியதாவது:
“அழுத பிள்ளைக்கு கழுதைப் பால் கொடு என்ற வழக்குச் சொல்லை இன்றளவும் கிராமங்களில் கேட்க முடியும். அந்தக் காலத்தில் கிராமங்களில் குழந்தைகளுக்கு உடம்புக்கு சரியில்லை என்றால் உடனே சலவைத் தொழில் செய்பவர்களிடம் இருக்கும் கழுதையிடமிருந்து ஒரு சங்கு பால் கறந்து குழந்தைக்குக் கொடுப்பார்கள்.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிறு மந்தம், சூடு, ஜுரம், சளி, இருமல், ஆஸ்துமா போன்ற வியாதிகள் கழுதைப் பாலால் குணமாகும். பிறந்த குழந்தைக்கு ஒரு பாலாடை கழுதைப் பால் கொடுத்தால் அதன் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கும்” என்றார்.
மக்களிடம் வரவேற்பு எப்படி என்று கேட்டதற்கு கணேசன் கூறியது: “நகரத்தில்தான் சிலர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். கழுதைப் பால் மருத்துவ குணம் உள்ளது என்று கூறினாலும் சிலர் நம்புவதற்கு மறுக்கின்றனர். அவர் களை நாங்கள் கட்டாயப்படுத்து வதில்லை.
ஒரு சங்கு பால் ரூ.30
பால் விற்பனைக்கென குட்டி ஈன்ற கழுதைகளை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் திண்டுக்கல், சித்தையன்கோட்டையில் இருந்து வாங்கி வருகிறோம். தாய் கழுதை மற்றும் குட்டியுடன் சேர்த்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலைக்கு கிடைக்கும். நாங்கள் ஒரு சங்கு பாலை ரூ.30-க்கு விற்கிறோம். ஒரு கழுதையிடமிருந்து ஒரு வேளைக்கு 150 மில்லி பால் கறக்கலாம்” என்றார்.
“கழுதைக்காக பெரிசா தீனிக்கு வாங்கிப் போட தேவையிருக்காது, குப்பையில் கிடக்கும் பேப்பரைத் தானே சாப்பிடும்” என்றதற்கு கணேசனுக்கு வந்ததே கோபம், “சார், உங்கள் ஊர்ல இருக்கும் ஆடுதான் சுவத்துல ஓட்டின போஸ்டரை திங்கும். மாடு குப்பையில் கிடக்கிற பேப்பரை யும் பிளாஸ்டிக்கையும் திங்கும். நாங்க கழுதைக்கு தினமும் புண்ணாக்கு கரைத்து கொடுக்கிறோம் தெரியுமா?” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT