Last Updated : 27 Aug, 2015 03:26 PM

 

Published : 27 Aug 2015 03:26 PM
Last Updated : 27 Aug 2015 03:26 PM

அரசுப் பள்ளி மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தும் பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை: மாநில திட்ட இயக்குநர் அறிவிப்பு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய அணுகுமுறை கல்வி திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டில் மாநில மொழிகளில் மாணவர்களின் வாசித்தல் திறனை மாணவர்களிடையே மேம்படுத்த மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடக்க நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசித்தல் திறனை பரிசோதித்து மேலும் அதை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் சாரம்சமாகும்.

இந்த திட்டத்தினை தொடக்க நிலை பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளிலும், நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இச்செயல்பாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் மிக நன்றாக தமிழில் வாசித்தல் திறன் பெற வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

பள்ளிகளில் சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் பயிலும் நிலையில் அவர்களுக்கான திறன்களில் நிறைவு பெற்றிருத்தல் வேண்டும். இதை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணக்கிட வேண்டும்.

இதன் மூலம் வாசித்தல் திறன் திறம்பட பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளுக்கென ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையைப் பெற, மாணவர்கள் முழுமையாக தமிழில் வாசித்தல் திறனை பெற்றிருக்க வேண்டும். பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி பிற அச்சிட்ட அந்தந்த வகுப்புகளுக்கான தர நிலையில் உள்ள நூல்கள், செய்தித்தாள்களை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அந்தந்த வகுப்புகளுக்கான குறிப்பிட்ட மனப்பாடப் பகுதிகளை தெளிவாகவும், வேகமாகவும் தங்கு தடையின்றியும் ஒப்பித்தல் வேண்டும். மாணவர்கள் வாசிக்கும் போது கொடுக்கப்பட்ட பகுதிகளை பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். சரியான உச்சரிப்புடன் நிறுத்துதல், குறியீடுகளுக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்தோடு உணர்ந்து படிக்க வேண்டும்.

அதேபோல், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக 50 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகள், 50 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிகள், 100 முதல் 151-க்கும் அதிகமான மாணவர்களை உள்ளடக்கிய பள்ளிகள் முழுமையான அளவில் வாசிப்புத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் வாசிப்புத் திறன் பெற்றிருந்தால் அந்த பள்ளிகள் பரிசுப்பெற விண் ணப்பிக் கலாம்.

இந்த தொகை மூலம் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் இறுதியாக தேர்வு செய்து அந்தப்பள்ளிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இதை கொண்டு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள், நூலகங்களை அமைத்தல் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவற்கான உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்டவைகளுக்கு செலவிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x