Published : 12 Jan 2020 08:20 AM
Last Updated : 12 Jan 2020 08:20 AM
திமுக கூட்டணிக்கு பெரும் பான்மை இருந்தும் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலை வர் பதவியை காங்கிரஸ் கட்சி யின் ஆதரவுடன் அதிமுக கைப் பற்றியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 22 ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் திமுக 11, காங்கிரஸ் 2 என திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக 8 மற்றும் தமாகா 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.
திமுக கூட்டணிக்கு பெரும் பான்மை இருந்ததால் யாரிடமும் ஆதரவு கோராமல் அக்கூட்டணி கட்சியினர் அமைதியாக இருந்த னர். இதையடுத்து, திமுக வேட் பாளராக கலைவாணி அறிவிக் கப்பட்டார். துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி கோரி யது. ஆனால், அதற்கு திமுக மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நடை பெற்ற மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி யிட்ட ஜெயலட்சுமி தமிழ்செல்வன் 12 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது, திமுக வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுக்கு திமுக கூட்டணியில் இருந்து 3 பேர் மாற்றி வாக்களித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நேற்று பிற் பகலில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுக ஆதரவுடன் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்க வேலுவின் மனைவி உமாமகேஸ் வரியும், திமுக சார்பில் கலைவாணி யும் போட்டியிட்டனர்.
இருவருக்கும் தலா 11 வாக்குகள் கிடைத்ததால் முடிவு அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து, குலுக்கல் முறையில் உமாமகேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. தேர்தல் முடிந்ததும் புதுக் கோட்டையில் ஹோட்டலில் தங்கி இருந்த அமைச்சர் சி.விஜய பாஸ்கரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ டி.புஷ்ப ராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் சந்தித் துப் பேசினர்.
தமிழகத்தில் எலியும், பூனையு மாக இருந்த காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் புதுக்கோட்டையில் கரம் கோர்த்து இருப்பது தமிழக அரசியலில் கடும் விவாதப் பொரு ளாக மாறி உள்ளது.
அதிலும், தர்ம.தங்கவேல் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT