Published : 11 Jan 2020 08:35 AM
Last Updated : 11 Jan 2020 08:35 AM
குமரி எஸ்ஐ வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவில் தமிழகம் மற்றும் கேரள போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி
னர். பாலக்காட்டில் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோரை தமிழக, கேரள போலீஸார் தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா
சோதனைச்சாவடியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, சோதனைச்சாவடி அணுகுசாலை வழியாக கேரள மாநிலம் இஞ்சிவிளைக்கு செல்லும் பாதை ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது எஸ்.ஐ. வில்சனை கொலை செய்த பின்பு கொலையாளிகள் நடந்தே செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ``திண்டுக்கல் பதிவெண் கொண்ட கருப்பு நிற காரில் வந்த இருவர் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால், கொலை நடந்த நேரத்தில் சோதனைச்சாவடி வழி
யாக அந்த கார் சென்றுள்ளது. அதில் கொலையாளிகள் வரவில்லை. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் இது தெளிவாகிறது.
துப்பாக்கியால் சுட்ட நபர்கள் இருவரும் நடந்தே வருகின்றனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் வில்சனை சுடுகிறார். மற்றொருவர் கத்தியால் குத்துகிறார். அப்போது அங்கிருந்த களியக்காவிளை எஸ்ஐ ரகுபாலாஜி கொலையாளிகளைப் பிடிக்க முயன்றுள்ளார். அவரையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு, கொலையாளிகள் இருவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்
துள்ளனர். மறுவாசல் வழியாக வெளியே வந்து கேரள மாநிலம் இஞ்சிவிளை வரை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று தப்பியுள்ளனர். இது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது’’ என தெரிவித்தனர்.
ஐஜி ஆய்வு
களியக்காவிளையில் நேற்று ஆய்வு செய்த தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் கூறியதாவது:
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை பிடிக்க, குமரியில் இருந்து 5 தனிப்படைகள், கேரளாவில் இருந்து 4 தனிப்படைகள், கியூ பிராஞ்ச் போலீஸார் என மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் குமரி, கேரள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
பரிசு அறிவிப்பு
குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கேரள போலீஸாரும், ரூ.4 லட்சம்
சன்மானம் வழங்கப்படும் என தமிழக போலீஸாரும் அறிவித்துள்ளனர். அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோரின் படங்கள் மற்றும் விவரங்களுடன் நோட்டீஸ்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதனிடையே, இவர்கள் இருவருக்கும் உதவியதாக பாலக்காட்டைச் சேர்ந்த 3 பேரை பிடித்து கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT