Published : 10 Jan 2020 07:36 AM
Last Updated : 10 Jan 2020 07:36 AM

பல்வேறு திட்டங்கள், விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.6,580 கோடிக்கு துணை மதிப்பீடுகள் தாக்கல்

சென்னை

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் விரி வாக்கப் பணிகளுக்காக ரூ.6 ஆயி ரத்து 580 கோடியே 15 லட்சத் துக்கு 2-வது துணை மதிப்பீடு களை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நேற்று அவர் பேசியதாவது:

2019-2020-ம் ஆண்டுக்கான 2-வது துணை மதிப்பீடுகள் ரூ.6 ஆயிரத்து 580 கோடியே 15 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கிறது. அதில் ரூ.3 ஆயிரத்து 952 கோடியே 48 லட்சம் வருவாய் கணக்கிலும், ரூ.2 ஆயிரத்து 627 கோடியே 67 லட்சம் மூலதனம் மற்றும் கடன் கணக்கில் அடங்கும்.

2019 ஜூலை 20-ல் தாக்கல் செய்யப்பட்ட முதல் துணை மதிப் பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய பணிகளுக்கான செலவினங்கள், எதிர்பாராத செலவுகளுக்கு பேர வையின் ஒப்புதலைப் பெறுவதே 2-வது துணை மதிப்பீடுகளின் நோக்கம்.

2020 பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ரூ.2 ஆயி ரத்து 363 கோடியே 13 லட் சத்தை அரசு அனுமதித்துள்ளது.

மின் தொடரமைப்பு திட்டம்

இது உணவு, நுகர்வோர் பாது காப்புத் துறையின்கீழ் சேர்க்கப் பட்டுள்ளது. சென்னை - கன்னியா குமரி தொழில் வழித்தடத்தில் மின் தொடரமைப்புத் திட்டங்களை நிறுவ ரூ.4 ஆயிரத்து 332 கோடியே 57 லட்சத்துக்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத் தொகை எரிசக்தித் துறையின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட் டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்க ரூ.3 ஆயிரத்து 266 கோடியே 47 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.90 கோடி மக்கள் நல்வாழ்வு, குடும்பநலத் துறையின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

2000 புதிய பேருந்துகள்

குடிமராமத்து திட்டத்தின்கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் இணைந்து நீர்நிலைகளைப் புதுப் பிக்க 2019-2020-ல் ரூ.500 கோடி அனுமதித்துள்ளது. விவசாயி களுக்கு நிலுவைத் தொகை வழங்க சர்க்கரை ஆலை களுக்கு முன்பணம், சென்னை காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங் களில் நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகள், 2 ஆயிரம் புதிய பேருந்துகள், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றுக்காக ஒதுக் கப்பட்ட நிதிகள் 2-வது துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட் டுள்ளன.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x