Published : 10 Jan 2020 07:14 AM
Last Updated : 10 Jan 2020 07:14 AM

ரஜினியின் ‘தர்பார்’ வெளியான தியேட்டர்களில் கரும்பு, பொங்கல் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்: சசிகலாவை குறிப்பிடுவதாக கூறப்படும் வசனத்தால் சர்ச்சை

சென்னை

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நேற்று வெளியானது. இதை முன்னிட்டு தியேட்டர்களில் கரும்பு, பொங்கல் வழங்கி ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடு பட்டனர். இப்படத்தில் ஒரு வசனம் சசிகலாவை குறிப்பிடுவதைப் போல் உள்ளதால் சர்ச்சை எழுந் துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் நேற்று ரிலீஸானது. சர்வதேச அளவில் 7000 அரங்கு களில் (ஸ்கிரீன்) இப்படம் வெளி யாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கமாக முன்னணி நடிகர் களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் ‘கட் அவுட்’ வைத்து கொண்டாடுவார்கள். தமிழகத்தில், தற்போது அதற்கு தடை இருப்பதால், ரஜினி ரசிகர்கள் கட் - அவுட்டை தவிர்த்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைப்படம் ரிலீஸானதால் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள தியேட்டர்களில் கரும்பு, பொங்கல் வழங்கி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தைகள் பலரும் ரஜினியின் ‘ஆதித்யா அருணாச்சலம்’ கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக படத் தில் ரஜினி அணிந்துள்ள போலீஸ் உடையை அணிந்து படம் பார்க்க வந்தனர்.

வசனத்தால் சர்ச்சை

இப்படத்தில் ஒரு காட்சியில், ‘பணம் இருந்தால் கைதியும் ஷாப்பிங் போகலாம்; தென்னிந்தி யாவில் கூட ஒரு கைதி இப்படி அப்பப்போ வெளியே போய்ட்டு வருவாங்களாமே!?’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசி கலாவை குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண் டியன் இதை கண்டித்துள்ளார். இக்காட்சியை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என படக்குழுவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ராஜா செந்தூர் பாண்டியன் மேலும் கூறியதாவது:

‘தர்பார்’ படத்தில் ஒரு வசனம் மறைமுகமாக சசிகலாவை குறிப்பிடுவதுபோல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த வசனத்தில் பெயரை குறிப்பிடாமல் இருப் பதால் அதை பெரிதுபடுத்த வேண் டாம் என்றிருந்தோம். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் இந்த வசனத்தை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பதாக தொலைக் காட்சி ஊடகங்கள் செய்தியை ஒளிபரப்பி வருகின்றன.

அதனால், தற்போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சசிகலா விஷ யத்தில் உண்மைக்கு மாறான விஷயங்கள் பரப்பப்பட்டு வரு கின்றன. தற்போது ஜெயக்குமாரும் அந்த வேலையை செய்கிறார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்வோம். ரஜினிகாந்த்தும், அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இப்படி ஒரு வசனத்தை வைக்க அனுமதித்திருக்க கூடாது. உடனடி யாக சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவார்கள் என நம்புகிறோம். இல்லையேல், அவர்கள் மீதும் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x