Published : 09 Jan 2020 07:11 AM
Last Updated : 09 Jan 2020 07:11 AM

மீனம்பாக்கம் ரோட்டரி கிளப் முயற்சியால் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை: உலக அளவில் ரூ.56 லட்சம் நிதி திரட்டியது

ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் உலக அளவில் திரட்டிய ரூ.56 லட்சம் நிதியின் மூலம் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குணமடைந்த சிறுவனை தி ரோட்டரி அறக்கட்டளை அறங்காவலர் குலாம் வகன்வதி நலம் விசாரித்தார். உடன் ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் அறக் கட்டளை தலைவரும், இலவச இதய அறுவை சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப் பாளருமான தாட்சாயணி, ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் தலைவர் நீலகண்டன்.

சென்னை

ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் உலக அளவில் திரட்டிய ரூ.56 லட்சம் நிதியின் மூலம் 100 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை நடந்தது.

ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக் கம், ஜெனிசிஸ் அறக்கட்டளையு டன் இணைந்து இதய நோயால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை 2019 பிப்.18-ல் தொடங்கியது. இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள மியாட், சூர்யா, எம்எம்எம் மருத்துவமனைகள் இணைந்தன.

ஜெசினிஸ் அறக்கட்டளை வழங் கிய ரூ.6 லட்சத்தை வைத்துக் கொண்டு சென்னையில் உள்ள ரோட்டரி கிளப்கள், மாவட்ட ரோட்டரி கிளப் மற்றும் அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா நாடுகளில் செயல்படும் ரோட்டரி கிளப்கள் மூலமாக ரூ.36 லட்சம் நிதியை ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் திரட்டியது. அனைவரும் உதவி செய்வதை பார்த்த உலக அளவில் செயல்படும் தி ரோட்டரி அறக்கட்டளை (டிஆர்எஃப்) தனது பங்காக ரூ.20 லட்சத்தை வழங்கியது.

உலக அளவில் திரட்டப்பட்ட ரூ.56 லட்சம் நிதியின் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட 100 ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் செய்யும் பணி மியாட், சூர்யா மற்றும் எம்எம்எம் மருத்துவமனைகளில் தொடங்கின.

இந்நிலையில், வெற்றிகரமாக 100-வது இதய அறுவை சிகிச்சை மியாட் மருத்துவமனையில் கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையான சாய் ஆரவுக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.

சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த தி ரோட்டரி அறக் கட்டளை அறங்காவலர் குலாம் வகன்வதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளை பார்த்து பெற்றோரிடம் நலம் விசாரித்தார்.

அப்போது ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் தலைவர் நீல கண்டன், மாவட்ட ரோட்டரி கிளப் கவர்னர் ஜி.சந்திரமோகன, ரோட்டரி கிளப் ஆஃப் மீனம்பாக்கம் அறக் கட்டளை தலைவரும் இலவச இதய அறுவை சிகிச்சை திட்டத் தின் ஒருங்கிணைப்பாளருமான தாட்சாயணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து தாட்சாயணி கூறும் போது, “ஜெனிசிஸ் அறக்கட்டளை வழங்கிய ரூ.6 லட்சம் நிதி சிறுதுளி பெருவெள்ளமாக பெருகியது. முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூல மும் அறுவை சிகிச்சைக்கு ஓரளவு பணம் கிடைத்தது. பிறந்து 4 நாட் களான குழந்தை முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x