Published : 31 May 2014 10:45 AM
Last Updated : 31 May 2014 10:45 AM
தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2 முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் பொறியியல், படம் பதனிடுதல், படத் தொகுப்பு ஆகிய 4 பிரிவுகளிலும், பட்டப் படிப்பு முடித்தவர்கள் இயக்குதல் பிரிவிலும் சேரலாம். மேலும் அரசு அங்கீகாரம் பெறப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அரசு ஓவியம் மற்றும் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி., (விஷுவல் கம்யூனிகேஷன், பி.எஸ்சி. (மாஸ் கம்யூனிகேஷன்), பி.எஸ்சி. (எலக்ட்ரானிக் மீடியா), பி.எஸ்சி. (அனிமேஷன் அல்லது விஷுவல் எஃபக்ட்ஸ்) மற்றும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டயப் படிப்பில் தேர்ச்சி மற்றும் ஓவியம் வரைதல் பயிற்சியில் அவசியம் தேர்ச்சி பெற்றவர்கள் உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப் பயன் பிரிவுக்கும் சேரலாம். 2014 15-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 2-ம் தேதி நாளிதழ்களில் வெளியிடப்படும். மேலும் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் ஜூன் 2-ல் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT