Last Updated : 04 Jan, 2020 04:56 PM

 

Published : 04 Jan 2020 04:56 PM
Last Updated : 04 Jan 2020 04:56 PM

தேனி மாவட்ட ஊராட்சியை கைப்பற்றிய அதிமுக

திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனிடம் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் வாழ்த்து பெற்றனர்.

தேனி மாவட்ட ஊராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 7 இடங்களையும், திமுக 2 இடங்களையும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வசமே தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக 7; திமுக 2:

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் 10 உள்ளன. இதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் அதிமுக 7 இடங்களையும், திமுக 2 இடங்களையும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

அதிமுக சார்பில் பிரீத்தா, எம்.சந்திரசேகரன், ஏ.ஈஸ்வரி, குக.பாண்டியன், நா.வசந்தா, யு.அல்லிதேவி, அ.இளம்வழுதி ஆகியோர் வெற்றி பெற்றனர். திமுக.சார்பில் எம்.வளர்மதி, ம.தமயந்தியும், பாஜக. சார்பில் பெ.ராஜபாண்டியனும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற உள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி: அதிமுக 48; திமுக 42

தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அதிமுக 49 இடங்களைக் கைப்பற்றியது. திமுக 42 இடங்களையும், அமமுக 6 இடங்களையும் பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் தாரணி போடி ஊராட்சி ஒன்றிய வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம், போடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றும்நிலை உள்ளது.

அதேபோல் சின்னமனூர், தேனி, பெரியகுளத்தில் திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். க.மயிலாடும்பாறை ஒன்றியத்தைப் பொறுத்தளவில் அதிமுக, திமுக. இருகட்சிகளும் தலா 7 வார்டுகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x