Published : 04 Jan 2020 11:58 AM
Last Updated : 04 Jan 2020 11:58 AM

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் திட்டமிட்ட தேர்தல் பணியால் 8 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றும் வாய்ப்பு: வெற்றி பெற்றும் கலங்கும் திமுக 

மதுரை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.வை விட திமுக கூடுதல் வெற் றியைப் பெற்றுள்ளது ஆளுங் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 9-ல் மட்டுமே அதிமுக வென்றது. திமுக 13, கூட்டணிக் கட்சி 1 என 14 இடங்களைக் கைப்பற்றி அதிமுக.வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாவட்டஊராட்சி வார்டில் கூட திமுக வெற்றி பெறவில்லை.

மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 214 வார்டுகள் உள்ளன. 2 வார்டுகளில் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 212 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 95 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 117 இடங்களை இழந்துள்ளது. இதனால் 13 ஒன்றியங்களில் 6-ல் திமுக முன்னிலை பெற்றுள்ளது. 1-ல் சமநிலையில் உள்ளது. இதுவும் அதிமுகவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதிமுக ஒரு பக்கம் சரிவைச் சந்தித்தாலும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் திட்டமிட்ட தேர்தல் பணியால் 8 ஒன்றியங்கள் வரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. மதுரை மாவட்ட அதிமுக.வில் நிர்வாக ரீதியாக கிழக்கு, மேற்கு என 2 மாவட்டங்களாகச் செயல்படுகிறது. கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக எம்எல்ஏ. வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளார். மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செயலாளராக உள்ளார்.

அதிமுக தோல்வியில் மதுரை கிழக்கு மாவட்டத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 90 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 35 வார்டுகளில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. 10 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 3-ல் மட்டுமே வென்றுள்ளது.

கிழக்கு மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 5 ஒன்றியங்களில் கொட்டாம்பட்டியில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. இங்கும் காங்கிரஸ் கட்சி நிறுத்திய போட்டி வேட்பாளர்கள், உட்கட்சிப் பிரச்சினைகளால் திமுக தோற்றுள்ளது. மற்ற 4 ஒன்றியங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது. திருப் பரங்குன்றம், மதுரை கிழக்கில் அதிமுக பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

மதுரை மேற்கு மாவட்டத்தில் உள்ள 124 வார்டுகளில் அதிமுக 89-ல் போட்டியிட்டு 55-ல் வென்றது. கூட்டணிக் கட்சி போட்டியிட்ட 37-ல் 5-ல் வென்றுள்ளது. திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக போட்டியிட்ட 31 வார்டுகளில் 26-ல் வென்றது.

சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்ட 24-ல் 12-ஐ கைப்பற்றியது. உசிலம்பட்டியில் போட்டியிட்ட 34 வார்டுகளில் 17-ல் அதிமுக வென்றது. இந்த வெற்றியால் கள்ளிக்குடி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய 5 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.

உசிலம்பட்டியில் திமுக. கூட்டணிக்கு நிகராக 5 வார்டுகளிலும், அலங்காநல்லூரில் திமுக 6-ல், அதிமுக 5- வார்டுகளிலும் வென்றுள்ளது. இங்கு சுயேச்சைகள் 2 பேரும், உசிலம்பட்டியில் 3 வார்டுகளில் அமமுக மற்றும் சுயேச்சைகள் வென்றுள்ளனர். இவர்கள் ஆதரவுடன் இந்த ஒன்றியங்களையும் கைப்பற்ற அமைச்சர் தரப்பு தற்போதே ரகசியப் பணிகளைத் தொடங்கிவிட்டது.

மதுரை மேற்கு ஒன்றியத்திலும் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர் பதவியைக் கைப்பற்ற அமைச்சர் தரப்பு ரகசியமாகத் திட்டமிட்டு வருகிறது. இந்த 3 ஒன்றியத் தலைவர் பதவிகளில் வென்றுவிட்டால், 8 ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றிவிடும். மேற்கு ஒன்றியத்தில் தோற்றாலும் 7-ஐ உறுதியாகக் கைப்பற்றி விடலாம் என்கின்றனர்.

கொட்டாம்பட்டியில் ஏற் கெனவே அதிமுக வென்றுள் ளது. இதனால் 8 அல்லது 9 ஒன்றியங்களை அதிமுக கைப்பற் றும் வாய்ப்பை அமைச்சர் உரு வாக்கி தந்துள்ளார். திமுகவுக்கு மதுரை கிழக்கு, சேடபட்டி, திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய 4 ஒன்றியங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும்.

மாவட்டத்தில் 42% வெற்றியை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது. அதேநேரம் திருமங்கலம் தொகுதி யில் அமைச்சரின் திட்டமிட்ட தேர்தல் பணியால் 80% வெற்றி கிடைத்துள்ளது. சோழவந்தான், உசிலம்பட்டியில் தலா 50% வெற்றி மூலம் ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்ற உதவியுள்ளது. மாவட்ட ஊராட்சியிலும் மேற்கு மாவட்டத்தில் அதிமுக போட்டியிட்ட 8 வார்டுகளில் 6-ல் வென்றதும் அதிமுக.வுக்கு ஓரளவு கவுரவத்தை அளித்துள்ளது.

இது குறித்து அதிமுக.வினர் கூறுகையில், ‘வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் பணியில் அமைச்சரின் செயல்பாடே மதுரை மாவட்டத்தில் அதிமுக கவுர வமான வெற்றியைப் பெற உதவி யுள்ளது. டி.கல்லுப்பட்டி, உசிலம் பட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டி ஒன்றியங்களில் அமைச்சரின் தேர்தல் பணியே திமுகவின் வெற் றியைப் பறித்துள்ளது’ என்றனர்.

திமுக 6 ஒன்றியங்களில் முன்னணி பெற்றாலும், சுயேச்சைகள் ஆதரவு உள்ளிட்ட ஆளுங்கட்சியின் செயல்பாட்டால் 2 ஒன்றியங்களை இழக்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் மட்டுமே அதிமுக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என திமுக.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x