Published : 04 Jan 2020 06:23 AM
Last Updated : 04 Jan 2020 06:23 AM

தேர்தலில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி மாணவி

பொள்ளாச்சி

ஊராட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதி நிதிகள் யாரும் பொறுப்பில் இல் லாத காலத்தில், மாற்றுத் திறனாளி கல்லூரி மாணவி ஒருவர், மூன்று ஆண்டுகளாக மக்களை தேடித் தேடிச் சென்று செய்த சமூக சேவை களை அங்கீகரிக்கும் விதமாக அவரை ஊராட்சி வார்டு உறுப்பின ராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனை மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆத்துப்பொள்ளாச்சி கிராம ஊராட்சி. 9 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில், 8-வது வார்டு உறுப்பினராக சரண்யா குமாரி (22) என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். மாற்றுத் திறனாளி யான இவர் உடுமலை அரசுக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக் கியம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மது அருந்துபவர்களின் புகலிடமாக இருந்த ஆத்துப்பொள் ளாச்சி பேருந்து நிழற்குடையில் குவிந்து கிடந்த மது பாட்டில்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து, சிந்தனைக்குரிய வாசகங்கள் மற்றும் ஓவியங்களை நிழற்குடை யில் வரைந்தார். இவரின் இந்த செயல் மக்களை கவனிக்க வைத் தது. தனியார் மருத்துவமனைகளின் இலவச மருத்துவ முகாம்களை ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் நடத்த வைத்தது, மழலை கல்வி பயிலகம் என்னும் பெயரில் குழந் தைகளுக்கு இலவச டியூஷன் என சமூக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதே ஊரைச் சேர்ந்த கணை யம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, குழந்தை இறந்தே பிறந் தது. அவரை கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச சிகிச் சைக்கு ஏற்பாடு செய்து உயிரை காப்பாற்றி உள்ளார் சரண்யா குமாரி. இது அப்பகுதி மக்களி டையே இவரது 'இமேஜை' உயர்த் தியது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகவே, அப்பகுதி மக்கள் இவரை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி உள்ளனர். இதனால் ஆத்துப்பொள்ளாச்சி 8-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரசியல் கட்சி வேட் பாளர்களை தோற்கடித்து 13 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இது குறித்து சரண்யா குமாரி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘எனது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். கல்லூரியில் படித்துக் கொண்டு அந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவி களை செய்து வந்தேன். தற்போது மக்கள் என்னை ஆதரித்து வாக்க ளித்து வெற்றி பெற வைத்துள்ளனர். இனி இந்த மக்களின் பிரதிநிதி என்ற பொறுப்புணர்வு கூடியுள்ளது. மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x