Published : 04 Jan 2020 05:39 AM
Last Updated : 04 Jan 2020 05:39 AM
நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை, திருநெல்வேலி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கைது செய்யப்பட்டார். வரும் 13-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் மத்திய சிறையில் நெல்லை கண்ணன் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, திருநெல்வேலி 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கடற்கரை செல்வம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment