Published : 04 Jan 2020 05:20 AM
Last Updated : 04 Jan 2020 05:20 AM
தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த் தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான முதல் கட்ட சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறை வடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக, தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தை கடந்த செப்.1-ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து, இணையதளம், செல்போன் செயலி ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என் பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இப்பணிகள் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முடி வடைந்த நிலையில், டிச.23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார்.
இதன்படி, தமிழகத்தில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆண்கள், 3 கோடியே 3 லட் சத்து 49 ஆயிரத்து 118 பெண்கள், 5 ஆயிரத்து 924 மூன்றாம் பாலி னத்தவர் என 6 கோடியே 1,329 வாக்காளர்கள் தமிழகத்தில் தற் போது உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக் காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட் சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர் களும் உள்ளதாக அறிவிக்கப் பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, வாக்காளர்கள் வரும் ஜன.22-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்து கொள்ளலாம். இதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஜனவரி 4,5 மற்றும் 11,12 ஆகிய 4 நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் முதல் கட்ட முகாம் இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள 67 ஆயிரத்து 687 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 18 வயது நிறை வடைந்தவர்கள் படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த் தலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, வெளிநாடு வாழ் இந் தியர்கள் 6 ஏ படிவத்தை சமர்ப்பித்து பெயர் சேர்க்கலம். படிவம் 7 சமர்ப்பித்து பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதுதவிர, தொகுதி விட்டு தொகுதி மாற்றம் மற்றும் ஒரு தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 மற்றும் 8 ஏ ஆகிய படிவங்களை சமர்ப்பித்து திருத்தம் செய்து கொள்ளலாம்.
இதுதவிர தாலுகா அலுவல கங்கள், வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடமும் மனுக்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அதாவது ஜன.11 மற்றும் 12-ம் தேதிகளில் வாக்காளர் திருத்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT