Published : 03 Jan 2020 02:21 PM
Last Updated : 03 Jan 2020 02:21 PM
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மதுரையில் நிறைவுற்றது. இறுதி நிலவரப்படி மதுரையில் 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 14 இடங்களில் வாகை சூடியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த டிச.27, 30 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரி, திருப்பாலை யாதவா கல்லூரி உட்பட 13 மையங்களில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது. நேற்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று (ஜன.3) மதியம் 1 மணியளில் நிறைவுற்றது. தேர்தல் ஆணையமும் அதிகாரபூர்வமாக முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மதுரையில் 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 14 இடங்களில் வாகை சூடியது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
மாவட்ட கவுன்சிலர் பதவி - மொத்தம் 23
திமுக- 13
பார்வர்ட் ப்ளாக்- 1
அதிமுக- 9
ஒன்றியக் கவுன்சிலர் - மொத்தம் 214
போட்டியின்றி தேர்வு - 2
அதிமுக கூட்டணி:
அதிமுக- 89
பாஜக- 3
தேமுதிக- 3
திமுக கூட்டணி:
திமுக- 92
காங்கிரஸ்- 4
விசிக- 1
அமமுக- 7
சுயேட்சை- 13
ஒன்றியம் வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்:
மதுரை கிழக்கு: ( மொத்தம் 18)
திமுக- 13
அதிமுக- 4
பாஜக- 1
மதுரை மேற்கு ( மொத்தம் 13)
திமுக- 5
காங்கிரஸ்- 1
அதிமுக- 5
சுயேட்சை- 2
திருப்பரங்குன்றம் (22)
திமுக 15
அதிமுக- 6
சுயேட்சை- 1
மேலூர் (22)
திமுக- 9
காங்கிரஸ்- 1
அதிமுக- 8
அமமுக- 3
சுயேட்சை- 1
கொட்டாம்பட்டி (20)
அதிமுக- 11
திமுக- 6
அமமுக- 2
சுயேட்சை- 1
வாடிப்பட்டி (14)
அதிமுக- 7
திமுக- 6
சுயேட்சை- 1
அலங்காநல்லூர் (14)
திமுக- 6
காங்கிரஸ்- 1
அதிமுக- 5
சுயேட்சை- 2
உசிலம்பட்டி (13)
அதிமுக- 5
காங்கிரஸ்- 1
திமுக- 4
அமமுக- 2
சுயேட்சை- 1
செல்லம்பட்டி (16)
அதிமுக- 9
திமுக- 6
சுயேட்சை- 1
சேடபட்டி (18)
திமுக- 12
அதிமுக- 3
பாஜக- 1
சுயேட்சை- 2
திருமங்கலம் (15)
அதிமுக- (10)
பாஜக- 1
திமுக- 3
தேமுதிக- 1
கல்லுப்பட்டி (13)
அதிமுக- 6
திமுக- 3
தேமுதிக- 2
சுயேட்சை- 2
கள்ளிக்குடி (14)
அதிமுக- 10
திமுக- 4
மதுரையில் 420 பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 26 பேர் போட்டியின்றி தேர்வாகினர். எஞ்சியுள்ள 394 பேர் தேர்தல் களம் கண்டு வெற்றி பெற்றனர்.
அதேபோல், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி மொத்தம் 3273. இதில், போட்டியின்றி தேர்வானவர்கள் 972 பேர். இரண்டு வார்டுகளில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நடந்த தேர்தலில் 2299 பேர் தேர்வாகியுள்ளனர்.
ஒன்றியங்களில் ஓங்கிய கை:
மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மேலூர், அலங்காநல்லூர், சேடபட்டி, மதுரை மேற்கு ஆகிய 6 ஒன்றியங்களில் திமுக கை ஓங்கியுள்ளது.
கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி ஆகிய 6 ஒன்றியங்களில் அதிமுகவின் கை ஓங்கியுள்ளது.
உசிலம்பட்டி ஒன்றியத்தில் திமுக அதிமுக சமபலத்துடன் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment