Published : 03 Jan 2020 12:10 PM
Last Updated : 03 Jan 2020 12:10 PM
சிவகங்கையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவில் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 8, திமுக கூட்டணி 8 என சரிசமமாக வெற்றி பெற்றுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு டிச.27-ம் தேதியும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், சாக்கோட்டை, கல்லல், தேவகோட்டை, கண்ணங்குடி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு டிச. 30-ம் தேதியும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றன.
இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமானதால் இறுதி நிலவரம் தெரியவர பின்னிரவு ஆனது.
காலையில் தேர்தல் ஆணையம் வெற்றியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகள் மொத்தம் 16. இதில் முறையே அதிமுக- 8, திமுக- 5, காங்கிரஸ்- 2, ஐஜேகே- 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம் வருமாறு:
கண்ணங்குடி ஒன்றியம் (6)
அமமுக 4
காங் 2
அமமுக சேர்மன்
தேவகோட்டை ஒன்றியம் (14)
அதிமுக கூட்டணி 8
திமுக 5
அதிமுக சேர்மன்
கல்லல் ஒன்றியம் (16)
திமுக கூட்டணி 9
அதிமுக 7
திமுக சேர்மன்
திருப்புவனம் ஒன்றியம் (17)
திமுக கூட்டணி 9
அதிமுக கூட்டணி 5
திமுக கூட்டணி சேர்மன்
இளையான்குடி ஒன்றியம் (16)
அதிமுக 8
திமுக 7
சுயேட்சை 1
சேர்மன் - இழுபறி
சாக்கோட்டை ஒன்றியம் (11)
அதிமுக 5
திமுக கூட்டணி 5
சுயேட்சை 1
சேர்மன் - இழுபறி
சிங்கம்புணரி ஒன்றியம் (10)
அதிமுக கூட்டணி 5
திமுக கூட்டணி 4
சுயேட்சை 1
சேர்மன் - இழுபறி
சிவகங்கை ஒன்றியம்(18)
அதிமுக கூட்டணி 9
திமுக கூட்டணி 7
அதிமுக சேர்மன்
காளையார்கோவில் ஒன்றியம் (19)
திமுக கூட்டணி 8
அதிமுக கூட்டணி 9
சுயேட்சை 2
சேர்மன் - இழுபறி
மானாமதுரை ஒன்றியம் (14)
திமுக கூட்டணி 7
அதிமுக 6
திமுக சேர்மன்
எஸ்.புதூர் ஒன்றியம் (7)
அதிமுக 4
திமுக கூட்டணி 3
அதிமுக சேர்மன்
திருப்பத்தூர் ஒன்றியம் (13)
அதிமுக - 2
தி மு க - 9
காங்கிரஸ் - 1
மற்றவை - 1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT