Published : 03 Jan 2020 10:08 AM
Last Updated : 03 Jan 2020 10:08 AM

அதிமுகவை விமர்சிக்கும் அன்புமணி ராமதாஸ்: அடுத்த தேர்தலுக்காக புதிய கூட்டணிக்கு தயாராகிறதா பாமக?

விழுப்புரம்

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபடியே அக்கட்சியை விமர்சித்திருக்கி றது பாமக. எனவே, வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் வேறொரு கூட்டணிக்கு அக்கட்சி தயாராகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர்.

பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 31-ம் தேதி திண்டி வனம் அருகே ஓமந்தூரில் நடை பெற்றது.

இதில் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராம தாஸ், "நாம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் அதிமுக, தனது ஆட்சியை தக்க வைத்திருக்க முடியாது. நாம் கூட்டணி வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி கூட்டணி அமைத்தோம். ஆனால், நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நமக்கு கால் சீட்டு, அரை சீட்டு எனகொடுத்தனர். ஆளும்கட்சித் தலைமை இனிவரும் காலங்களில் இதனை சரி செய்ய வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் நம் வியூகம் என்ன என்பதை ராமதாஸ் விரைவில் சொல்வார்'' என்றார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், "ஜனவரி தொடங்கி ஜூன் மாதத் திற்குள் 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்கு வங்கிகளை உறுதிப்படுத்த வேண்டும்'' என்றார்.

அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே, இப்படி ராமதாஸூம் அன்புமணியும் பேசியது அரசியல் வட்டாரங்களில் சில விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

இது குறித்து பாமக மூத்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் நோக்கர் களிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:

தற்போது முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமகவிற்கு உரிய அங்கீகாரத்தை அதிமுக அளிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற உள்ள9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் பாமக வலுவாக உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்கள் பாமகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும், அங்கு அதிமுக போட்டியிட்டது. திருவள்ளூர், திருவாரூர், நாகை மாவட்டத்தில் இது அதிக அளவில் நடைபெற்றது.

தங்களை கறிவேப்பிலையாக அதிமுக பயன்படுத்துவதை தடுக் கவே பாமகவின் பொதுக்குழுவில் அப்படி பேசியிருக்கின்றனர்.

தற்போதுள்ள பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆளும் அமைச்சர்களிடம் சரணடைந்து விட்டனர். கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டுவ தில்லை. எனவே இளைஞர்களை கட்சிக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்கு வங்கியை சட்டமன்ற தேர்தலுக்கு முன் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கட்சி பணிகளில் ஈடுபாட்டுடன் இல்லாத எந்த நிர்வாகியாக இருந் தாலும் பதவியைப் பறிக்க தலைமை தயாராகியுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நம் வியூகம் என்ன என்பதை ராமதாஸ் விரைவில் சொல்வார்' என்று அன்புமணி இக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். சசிகலா சிறை யிலிருந்து விடுதலையாகி வரும்சூழலில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை திமுகதனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும். இந்த தருணத்தில் திமுகவிற்கு மாற்றாக தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க பாமக திட்டமிடுகிறது.

கடந்தாண்டு, டிசம்பர் 29, 30ம் தேதிகளில் கோவையில் தலைமை செயற்குழு கூட்டமும், சிறப்பு பொதுக்குழுவும் நடைபெற்ற பிறகே, அக்கட்சி அதிமுக கூட்ட ணியில் இணைவது என்று முடிவெ டுக்கப்பட்டது. அதே போல நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இருவரும் பேசியதை புறந் தள்ளிவிட முடியாது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வேறொரு கூட்டணிக்கு அக்கட்சி தயாராகிறது என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x