Published : 31 May 2014 10:38 AM
Last Updated : 31 May 2014 10:38 AM
திமுக தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்த நாள் விழா, ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்களின் வாழ்த்துக் களை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறார்.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப் பதாவது:
திமுக தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்த நாள் விழா, ஜூன் 3-ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், பின்னர், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் கருணாநிதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத் தில் நடக்கும் பிறந்தநாள் விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்கிறார். மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT