Published : 03 Jan 2020 07:01 AM
Last Updated : 03 Jan 2020 07:01 AM

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: அதிமுக, திமுக கூட்டணி முன்னிலையில் இழுபறி- இறுதி முடிவுகள் இன்று மாலை வெளியாகும்; கொட்டும் பனியில் விடிய விடிய காத்திருந்த கட்சியினர்

சென்னை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தொடங்கியது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக் கான போட்டியில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மாறி, மாறி முன்னிலை வகித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கை இன்றும் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங் கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, சென்னை ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்பட்டது.

இந்த மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக் கப்பட்டது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

பரிசீலனையின்போது 3,643 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48,891 பேர் தங்கள் வேட்புமனுக் களை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து 18,137 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 410 கிராம ஊராட்சி மன்றத் தலை வர்கள், 23 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 18,570 பதவிகளுக்கு போட்டி யின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இறுதியாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதல்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு, 156 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 27-ம் தேதி நடந்தது. இதில் 77.10 சதவீத வாக்குகள் பதிவாயின. 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்டமாக 30-ம் தேதி நடந்த தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப் பெட்டிகள் அனைத்தும் 315 இடங்களில் அமைக்கப்பட் டுள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டன. அங்கு 3 அடுக்கு பாது காப்பு போடப்பட்டிருந்தது. கண் காணிப்பு பணியில் 30,354 போலீ ஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், 315 மையங்களி லும் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து வாக்குப் பெட்டி கள் வைக்கப்பட்டிருந்த அறைகள், அரசியல் கட்சி முகவர்கள் முன் னிலையில் திறக்கப்பட்டன. ஒவ் வொரு வாக்காளரும் 4 பதவி களுக்கு 4 வண்ண சீட்டுகளில் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதனால், வாக்குப் பெட்டிகள் முத லில் வாக்குகளை பிரிக்கும் அறை களுக்கு கொண்டு செல்லப்பட்டு வண்ணம் வாரியாக சீட்டுகள் பிரிக் கப்பட்டன. பின்னர் அவை கட்டு களாக கட்டப்பட்டு வாக்கு எண்ணும் அறைகளுக்கு அனுப்பப்பட்டன. ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனியே வாக்கு எண்ணும் அறை கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பணிகளை முடிக்கவே பிற்பகலுக்கு மேல் ஆகிவிட்டதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவே தொடங் கியது. வேட்பாளர்களின் முகவர் கள் முன்னிலையில் வாக்குகள் எண் ணப்பட்டன. இப்பணிகள் அனைத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டன.

சில இடங்களில் வாக்கு எண் ணிக்கையில் ஈடுபடும் அலுவலர் களுக்கு உணவு வழங்கவில்லை. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. வாக்கு எண்ணும் பணி இன்றும் (வெள்ளிக் கிழமை) தொடரும் என மாநில தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங் கியதில் இருந்து அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மாறி மாறி முன் னிலை வகித்தன. மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு இரு கூட்டணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இரவு 9 மணி நிலவரப் படி, மொத்தம் உள்ள 76,746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 20, 955 இடங்களுக்கும், 9,024 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 1,670 இடங்களுக்கும் முடிவுகள் அதி காரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதேபோன்று 5,090 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி களில் 853 இடங்களுக்கு அறிவிக்கப் பட்ட முடிவுகளில் திமுக கூட்டணி 411 இடங்களிலும், அதிமுக கூட்டணி 352 இடங்களிலும், இதர கட்சிகள் 116 இடங்களிலும் வென்றுள்ளன.

மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர் பதவிகளில் அதிமுக கூட்டணி 171, திமுக கூட்டணி 163, அமமுக 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில், திமுக கூட்டணி 910 இடங்களிலும், அதிமுக கூட்டணி 784 இடங்களிலும், அமமுக 29 இடங்களிலும், இதர கட்சிகள் 113 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இறுதி முடிவு இன்று மாலை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்ததால் கொட்டும் பனியிலும் விடிய விடிய கட்சித் தொண்டர்கள் காத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்தப் பகுதிகளில் திடீர் கடைகளும் முளைத்தன. உணவு, டீ விற்பனை அமோகமாக நடந்தது.

வாக்கு எண்ணிக்கை இன்றும் தொடரும்

மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, சென்னை யில் நேற்று கூறியதாவது:வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3 ஆயிரம் அலு வலர்கள் வீதம் 27 மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும், வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட தலா 6 மத்திய அரசு அலுவலர்கள் வீதம் 1,890 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரிகள் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணித்து வருகின்றனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்டு வருகின்றனர்.

வாக்குச் சீட்டுகள் எடுத்துச் செல்லும் பாதை மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தலா 50 முதல் 60 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 16 ஆயிரம் கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வெற்றி பெற்றோருக்கு உடனுக்குடன் சான்றிதழ் களை வழங்க தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிகளில் சற்று தாமதம் ஏற்படுகிறதே தவிர, திட்டமிட்டு எங்கும் காலதாமதம் செய்யப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை, நியாயமாகவும், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வெளிப்படையாக நடந்து வருகிறது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு எண்ணும் பணிகள் இரவும் தொடர்ந்து நடைபெறும். நாளையும் (வெள்ளிக்கிழமை) தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x