Published : 02 Jan 2020 01:20 PM
Last Updated : 02 Jan 2020 01:20 PM
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் 1-வது ஒன்றிய கவுன்சில் வார்டுக்கு சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக அதிருப்தி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் வார்டு எண் 1 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர். களம் கண்ட 6 வேட்பாளர்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட (அதிமுக) ஈஸ்வரி 1422 வாக்குகளும், சுத்தியல் அரிவாள் சின்னத்தில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட கோபால் 331 வாக்குகளும், நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட நந்தகோபால் 65, வாக்குகளும் தண்ணீர்க் குழாய் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட (அதிமுக அதிருப்தி வேட்பாளர்) மணிகண்டன் 2056 வாக்குகளும், யானை சின்னத்தில் போட்டியிட்ட ரமேஷ் 129 வாக்குகளும், அமமுக சார்பில் போட்டியிட்ட வடிவேல் 20 வாக்குகளும் பெற்றனர்.
இதில் தண்ணீர்க் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட மணிகண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அதிமுக சார்பில் தனக்கு சீட் வழங்கப்படாததால் கட்சியின் மீதான அதிருப்தியில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக திமுக விவேகானந்தன் 2791 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
3- வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக நாகலட்சுமி திமுக 2148 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 4- வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக திமுக ராஜேஷ்வரி 815 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதேபோல், பழனி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சித் தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் பதிவான 1760 வாக்குகளில் 1236 வாக்குகள் பெற்று ஆட்டோரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிட்ட சுப்ரமணி வெற்றி பெற்றார். 399வாக்குகள் பெற்று காளியப்பன் இரண்டாமிடம் பிடித்தார்.
கொடைக்கானல் கூக்கால் ஒன்றிய கவுன்சிலராக தி.மு.க வேட்பாளர் பூங்கொடி வெற்றி பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT