Last Updated : 31 Dec, 2019 02:57 PM

 

Published : 31 Dec 2019 02:57 PM
Last Updated : 31 Dec 2019 02:57 PM

வாக்கு எண்ணிக்கை மையங்களின் கேமராப் பதிவுகளை திரையில் ஒளிபரப்பக் கூடாது: தேர்தல் ஆணையம்

மதுரை

உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் மையங்களின் சிசிடிவி கேமராப் பதிவுகளை எக்காரணம் கொண்டு திரையில் பார்க்கவோ, ஒளிபரப்பவோ கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட வாக்குப் பதிவு, 156 ஊராட்சி ஒன்றிங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 27-ம் தேதி நடந்தது. இதில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகின. எஞ்சியிருந்த 158 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடந்தது.

2 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்தது. மாநில தேர்தல் ஆணையமும் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை வீடியோ கேமரா மூலம் கண்காணிப்பதாக தேர்தல் ஆணையமும் உத்தரவாதம் அளித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/ மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் இல.சுப்பிரமணியன் சுற்றறிக்கை அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, "வாக்கு எண்ணும் நாளில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது முதல் வாக்கு எண்ணும் பணி முடியும் வரை அறைகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சிசி டிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்களின் நடவடிக்கைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

வாக்குச்சீட்டுகளை மையப்படுத்தி பதிவு செய்யக்கூடாது. இப்பதிவுக்காக ஒவ்வொரு அறையிலும் இரு கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவு செய்யப்படும் பதிவுகளை எக்காரணம் கொண்டும் திரை மூலமாக பார்க்கவோ, ஒளிரபரப்பவோ கூடாது. இந்த கேமரா பதிவை மாநில தேர்தல் ஆயைத்தின் முன் அனுமதி பெற்ற பிறகே பகிர்தல் வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x