Published : 30 Dec 2019 05:08 PM
Last Updated : 30 Dec 2019 05:08 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் எம்.பி., மற்றும் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ., ஆகியோர் வாக்களித்தனர். மற்ற 4 எம்.எல்.ஏ.,க்கள் நகர்பகுதியில் வசிப்பதால் அங்கு தேர்தல் நடைபெறாததால் வாக்களிக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு எம்.பி., தொகுதியும், ஏழு சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. இதில் திண்டுக்கல் நகரில் மட்டும் அமைச்சர் சி.சீனிவாசன் (திண்டுக்கல்) இ.பெரியசாமி (ஆத்தூர்), இ.பெ.செந்தில்குமார்(பழநி), பரமசிவம்(வேடசந்தூர்) ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்கள் குடியிருக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வாக்கு உள்ளதால், நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடைபெறாததால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது.
நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி பேரூராட்சி பகுதியில் வசிப்பதால், அங்கு தேர்தல் நடைபெறததால் இவரும் வாக்களிக்க வாய்ப்பில்லாநிலை ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜவ்வாதுபட்டி கிராமத்தில் வாக்களித்த திண்டுக்கல் எம்.பி., ப.வேலுச்சாமி.
இந்நிலையில் திண்டுக்கல் எம்.பி., ப.வேலுச்சாமி ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜவ்வாதுபட்டி கிராமத்தில் வாக்களித்தார். ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ., அர.சக்கரபாணி தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தயம் கிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
முன்னதாக முதற்கட்ட தேர்தலில் நத்தம் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் நத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT