Last Updated : 30 Dec, 2019 12:33 PM

 

Published : 30 Dec 2019 12:33 PM
Last Updated : 30 Dec 2019 12:33 PM

தூத்துக்குடியில் காலை 11 மணி நிலவரப்படி 22.37%  வாக்குப்பதிவு 

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 22.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக புதூர் ஒன்றியத்தில் 37.76 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று (30-ம் தேதி) நடைபெற்று வருகிறது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என மொத்தம் 170 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 80 வாக்குச்சாவடி மையங்களில் நுண் பார்வையாளர்கள் மூலமும், பிற வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா அல்லது வீடியோ கவரேஜ் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது.

தொடர்ந்து பதற்றமான வாக்குச்சாவடிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படாத வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2300 காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


ஒன்றியம் வாரியாக வாக்குப்பதிவு விவரம்:

கோவில்பட்டி- 14.59%

கயத்தாறு- 34.38%

ஓட்டப்பிடாரம்- 14.96% .

விளாத்திகுளம் - 22.35%

புதூர் - 37.76%

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 4,01,434. தற்போது வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 89,1603 என்றளவில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x