Published : 30 Dec 2019 07:39 AM
Last Updated : 30 Dec 2019 07:39 AM
பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜன.8-ம் தேதி மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களையும் அந்தந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.8-ம் தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விagடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, திருச்சியில் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று பொது வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.
தொமுச அகில இந்திய பொருளாளர் கி.நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, தொமுச மாநிலத் தலைவர் மு.சண்முகம் எம்பி, எச்எம்எஸ் பொதுச் செயலாளர் சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜன.8-ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் மோட்டார் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜன.8-ம் தேதி மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களையும் அந்தந்த இடங்களில் நிறுத்த வேண்டும். இதற்காக மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT