Last Updated : 29 Dec, 2019 04:15 PM

2  

Published : 29 Dec 2019 04:15 PM
Last Updated : 29 Dec 2019 04:15 PM

நடிகர்கள் பணம் பார்த்து நடிக்கிறார்களே தவிர, தரம் பார்த்து நடிப்பதில்லை: விக்கிரமராஜா கவலை

புதுக்கோட்டை

நடிகர்கள் பணம் பார்த்து நடிக்கிறார்களே தவிர, தரம் பார்த்து நடிப்பதில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நடிகர்கள் பணம் பார்த்து நடிக்கிறார்களே தவிர, தரம் பார்த்து நடிப்பதில்லை. பாதிப்புகளை உணர்ந்து, தரம் பார்த்து நடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நடிக்கும் படங்கள் தோல்வியில்தான் முடியும் என்பதற்கு 'சங்கத் தமிழன்' படம் ஒரு உதாரணம் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் விளம்பர படத்தில் நடித்ததற்காக எங்களிடம் இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. எங்களை சந்தித்து பேசுவதாக கூறி உள்ளார்.

தமிழகத்தில் வணிகர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துறையை விட்டு வெளியேறக்கூடிய நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஜிஎஸ்டியை முழுமையாக எதிர்க்கவில்லை. ஆனால், அதில் உள்ள சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

சாதாரண வியாபாரிகளின் நிலையையும், ஜிஎஸ்டி அபதாரம் விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜன. 6 முதல் 8-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது.

அதில் எடுக்கும் முடிவுளின் அடிப்படையில் ஆன்லையன் வணிக நிறுவனங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x