Published : 28 Dec 2019 09:13 AM
Last Updated : 28 Dec 2019 09:13 AM

சுங்கச்சாவடிகளில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

விழுப்புரம்

திண்டிவனம் அருகே மயிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அனைத்து கட்சிகளுக்கும் கொள்கை, கோட்பாடு, இலக்கு உள்ளது. கட்சி தொடங்குவதே ஆட்சிக்கு வருவதற்குதான். சட்டப்பேரவை தேர்தல் வரும்போது அரசியல் சூழல் எப்படி இருக்கும் என்றுயாருக்கும் தெரியாது வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.

தங்க நாற்கர சாலைக்கு அரசும்,தனியாரும் முதலீடு செய்துள்ளனர். இதற்கு 5 ஆண்டுகள் முதல்7 ஆண்டுகள் வரை சுங்க வரி வசூலிக்க வேண்டும். உதாரணமாக சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் 12 ஆண்டுகளாக சுங்கம் வசூலிக்கப்படுகிறது. அவர்களின் மொத்த செலவே ரூ.540கோடிதான். தற்போது வரைரூ.1,100 கோடி சுங்க கட்டணமாக வசூலித்துள்ளனர். 50 ஆயிரம்வாகனங்கள் சென்றால், 10 ஆயிரம் வாகனங்கள் சென்றதாக அரசுக்கு கணக்கு காட்டப்பட்டு மோசடி நடக்கிறது.

பெங்களூரு நெடுஞ்சாலையில் வாலாஜா வரை 4 வழி சாலையும், அங்கிருந்து ஓசூர் வரை 6 வழி சாலையும் உள்ளன. ஆனால் 6 வழிச்சாலைக்கான சுங்கம் சாலையின் தொடக்கத்தில் இருந்தே வசூலிக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி மோசடிக்காக நாங்கள்போராடி விட்டோம். நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் பேசியும் இதுபற்றி பலனில்லை. இவ்விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x