Published : 28 Dec 2019 08:38 AM
Last Updated : 28 Dec 2019 08:38 AM
சென்னையில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம்போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் அத்துமீறு பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் ஆணையர் எச்சரித் துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு ‘2020’-ஐ வரவேற்கும் விதமாக சென்னை மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய கடற் கரை பகுதிகளில் வரும் 31-ம் தேதி நள்ளிரவு மக்கள் அதிக அளவில் திரள்வார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும்.
நட்சத்திர ஓட்டல்கள், கடற் கரை சாலையில் உள்ள விடுதி களில் விடிய விடிய சிறப்பு கொண்டாட்டங்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களை சென்னை போலீஸார் தீவிரமாக மேற்கொண்டு வரு கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் 31-ம் தேதி இரவு 9 மணி முதல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. மயிலாப்பூர், கீழ் ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு, புனித தோமையர் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணா நகர், புளியந்தோப்பு ஆகிய காவல் மாவட்டங்களில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பைக் ரேஸ்
பைக் பந்தயத்தில் ஈடுபடுவோரை பிடிக்க கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர். போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 500-க்கும் அதிகமான இடங்களில் வாகன தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி கண்காணிக்கப்பட உள்ளது.
புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்கிறோம் என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணியில்15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத் தப்பட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT