Published : 28 Dec 2019 08:36 AM
Last Updated : 28 Dec 2019 08:36 AM
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதை ஆதரிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 30-ம் தேதி நடக்கவுள்ளது. இப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டிசம்பர் இறுதி வாரம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் பாஜகவின் மாநில தலைவர்களை தேர்ந்தெடுப்பது நடைமுறை. எனவே, பொங்கலுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார். அதன் பிறகு தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு தனி நபரை நம்பி பாஜக இயங்கவில்லை.
இலங்கையில் வாழும் தமிழர்களை, இலங்கை தமிழர்கள் என்று சொல்லி வந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் உட்பட பலர் இலங்கை இந்துக்கள் என அவர்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில், அவர்கள் இலங்கை இந்துக்கள்தான்.
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் குடியுரிமை கேட்டால் தந்தாக வேண்டும். அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்றால், அதற்கு நான் உடன்படுகிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT