Published : 27 Dec 2019 05:48 PM
Last Updated : 27 Dec 2019 05:48 PM
தென்சியில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொழில்முனைவோர் 2 பேருக்கு மொத்தம் ரூ.20 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார். மேலும், வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.48 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் மொத்தம் ரூ..1 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட இயந்திரங்களின் மொத்த மானியத் தொகை ரூ.68 லட்சம் ஆகும்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணபிள்ளை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக் குமார், வேளாண் துணை இயக்குநர்கள் நல்லமுத்துராஜா, டென்னிசன், பாலசுப்பிரமணியன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
“தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 325 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில், இதுவரை 1747 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு. ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
இதில் 1598 மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட்டதில் 27 மாதிரிகள் தரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 விதை விற்பனையாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும், 2 விற்பனையாளர்கள் மீத சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
தரக்குறைவாக 7.94 டன் விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.35.26 லட்சம்” என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT