Published : 25 Dec 2019 09:46 AM
Last Updated : 25 Dec 2019 09:46 AM
பிளாஸ்டிக் மரத்துக்கு மாற்றாக அசல் கிறிஸ்துமஸ் அரக்கேரியா மரக்கன்றுகளை தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் தோட்டக்கலைத் துறை விற்பனை செய்து வருகிறது.
கிறிஸ்து பிறப்பையொட்டி, தேவாலயங்கள், கிறிஸ்தவர்களின் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங் களை வைத்து அலங்கரிப்பது வழக்கம். இதற்காக செயற் கையான பிளாஸ்டிக் மரங்களை வைத்து அலங்கரிப்பர். ஆனால் பண்டிகை முடிந்தவுடன் விலையு யர்ந்த பிளாஸ்டிக் மரங்கள் பயன் பாடின்றி சுற்றுச் சூழலுக்கு கேடு ஏற்படுத்தும்.
இதைத் தடுக்கும் விதமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகை யில் அசல் கிறிஸ்துமஸ் மரமான அரக்கேரியா வகை மரக்கன்றுகள் தோட்டக் கலைத் துறையால் இந்த ஆண்டு முதல் மதுரையில் விற்பனை செய்யப்படுகின்றன. மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் இதன் விற்பனையை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கோ. பூபதி நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநில தோட்டக்கலைத் துறை இயக்குநரின் அறிவுறுத்தல்படி அரக்கேரியா மரக்கன்றுகள் விற் பனையைத் தொடங்கி உள் ளோம். இந்த ஆண்டு வெறும் 100 மரக்கன்றுகளை மட்டும் வழங்குகிறோம். வரும் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான மரக்கன் றுகளை விற்க திட்ட மிட்டுள்ளோம்.
இந்த மரக்கன்றுகளை தேவா லயங்கள், வீடுகளில் நட்டு பராமரிக்கலாம். சில ஆண்டுகளில் பெரிய மரமாக வளர்ந்து விடும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக் கப்படும்.
அரக்கேரியா மரம் கூம்பு வடி வத்தில் அடுக்கடுக்காக வள ரும். ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் உள்ளன. மலைப் பிரதேசங்களில் செழித்து வளரும். மற்ற பகுதிகளிலும் வளரும் தன் மையுடையது. இதனை தற்போது மதுரைக்கு அறிமுகப் படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT