Published : 24 Dec 2019 08:06 AM
Last Updated : 24 Dec 2019 08:06 AM
காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் 4 நாட்களுக்கு நடக்க உள்ளதால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே 24 (இன்று), 27, 28, 31 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளன. இதனால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 10.08, 10.56 மணி மின்சார ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.48 மணி ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 11.30 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும். திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்தும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20 மணி ரயில் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment