Published : 24 Dec 2019 07:02 AM
Last Updated : 24 Dec 2019 07:02 AM
தமிழகத்தில் நேற்று வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும் 6 கோடியே 1,329 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய வரும் ஜன. 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் வெளியிடப் பட்ட வரைவு வாக்காளர் பட்டி லில், தற்போது 2 கோடியே 96 லட் சத்து 46,287 ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49,118 பெண்கள் மற்றும் 5,924 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 1,329 வாக் காளர்கள் உள்ளனர். மாநிலத்தி லேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவை தொகுதி யாக 6 லட்சத்து 46,073 வாக்காளர் களுடன் சோழிங்கநல்லூர் முத லிடத்தில் உள்ளது. அதேபோல், மாநிலத்தில் குறைந்த வாக்காளர் களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சென்னை துறை முகம் உள்ளது. இங்கு, 1 லட்சத்து 69,620 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச் சாவடிகள் ‘elections.tn.gov.in’ என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளா கக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது. இதன்படி, வரும் 2020-ம் ஆண்டு ஜன.4, 5 மற்றும் 11,12 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி களில் சிறப்பு முகாம்கள் நடை பெறும். இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் ஆகிய வற்றுக்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.
மேலும், டிச.23-ம் தேதி முதல் வரும் ஜன.22-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர்கள் அதற்குரிய படிவங் கள் 6,7,8 அல்லது 8 ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து, அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக் குச்சாவடிகளில் அலுவலர்களிட மும் வழங்கலாம்.
பெயர் சேர்ப்பதற்கான விண்ணப் பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்று கள் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசு அல்லது அரசு சார் பொதுத்துறை பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு) , உழவர் அடையாள அட்டை, ஆர்.ஜி.ஐ வழங்கிய என்.பி.ஆர் ஸ்மார்ட் அட்டை, சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை முகவரிச் சான்றாக சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மேலும், 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான் றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். இதுதவிர, ‘www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் ‘வாக்காளர் உதவி செல் போன் செயலி’ ஆகிய ஆன்லைன் முறைகளிலும் விண்ணப்பிக்க லாம். மேலும், 2020-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி 18 வயது நிறை வடைந்தவர்கள், வாக்காளர் பட்டி யலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்போது, விண்ணப்பதாரர்கள் படிவத்தில் உள்ள உறுதிமொழியை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்து, அவருடைய புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட் டாட்சியர் அல்லது மண்டல அலு வலகத்தில் படிவம் 001-ல் விண் ணப்பிக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள், 6 ஏ விண்ணப்ப படிவத்தை நேரிலோ அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலோ அனுப்பலாம். நேரில் அளிக்கப்படும்போது, விண்ணப்ப தாரரின் புகைப்படம், இதர விவரங் களுடன் விசாவின் செல்லும் திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் பக்கங்களின் நகலையும் இணைக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி அசல் பாஸ்போர்ட்டை ஒப்பிட்டுப் பார்த்து உடனடியாக திரும்ப கொடுத்துவிடு வார். படிவம் 6 ஏ-வை தபாலில் அனுப்பும்போது, பாஸ்போர்ட் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 38 லட்சம்
சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று வெளியிட்டார். அதில் உள்ள விவரங் களின்படி, சென்னையில் 38 லட்சத்து 88,673 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின் போது இருந்த வாக்காளர்களைவிட தற்போது 32,362 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். 9,745 வாக் காளர்களின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன. அதிகபட்சமாக வேளச் சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 3 லட்சத்து 3,909 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 69,620 வாக்காளர்களும் இடம்பெற்று உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment