Published : 23 Dec 2019 01:06 PM
Last Updated : 23 Dec 2019 01:06 PM

மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆட்சியர் வெளியிட்டார்

மதுரை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான டி.ஜி.வினய் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிகள் முன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி மதுரையில் ஆண் வாக்காளர்கள் 12,76,784; பெண் வாக்காளர்கள் 13,12,040, மூன்றாம் பாலினம் 157 என மொத்தம் 25,88,981 வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்தம் செய்ய என்னென்ன படிவங்கள்?

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 6, பெயர்களை நீக்கம் செய்திட படிவம் 7 , பட்டியலில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்திட படிவம் 8, அதே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு சென்று திருத்தம் மேற்கொள்ளலாம்...

23.12.2019 முதல் 22.01.2020 வரை வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களிலும் அலுவலக வேலை நாட்களில் மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம்.

4.1.2020, 5.1.2020, 11.1.2020 மற்றும் 12.1.2020 ஆகிய 4 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம்.

பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 14.02.2020 அன்று வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x