Published : 20 Dec 2019 10:42 AM
Last Updated : 20 Dec 2019 10:42 AM

குறைந்த வாடகையில் தனியார் மண்டபங்களுக்கு சவால்விடும் வசதிகளுடன் மதுரையில் அம்மா திருமண மண்டபம் திறப்பு

மதுரை அண்ணாநகர் 3-வது குறுக்குத் தெருவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

முன்னதாக மண்டபம் அமைக்கும் பணி 2018-ல் தொடங்கியது. தனியார் திருமண மண்டபம் போல அனைத்து வசதிகளும் ஓராண்டுக்குள் செய்து முடிக்கப்பட்டன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா திருமண மண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இத்திருமண மண்டபத்தின் தரைத் தளத்தில் கார் பார்க்கிங் வசதி, முதல் மாடியில் சமையலறை, உண வுக்கூடம், இரண்டாவது மாடியில் குளிரூட்டப்பட்ட திருமண அரங்கு, மூன்றாவது மாடியில் விருந்தினர்கள் தங்கும் அறை போன்ற வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன.

மின்தடை ஏற்பட்டால் எரியும் வகையில் 12 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ள்ளன. மேலும், ஜெனரேட்டர் வசதியும் உண்டு.

இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் கே. பழனிசாமி டிச.9-ம் தேதி காணொளி மூலம் திறந்து வைத்தார். தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் வாடகைக்கு விடவில்லை.தேர்தல் முடிந்தபின் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும், என்றார்.

திருமண செலவில் பெரும் செலவாக மண்டப வாடகை இருக்கும் நிலையில், அம்மா திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு வந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையைத் தொடர்ந்து சென்னையில் கொரட்டூர், அயப்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் பிரம்மாண்ட அம்மா திருமண மண்டபவங்கள் அமைக்கப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x