Published : 20 Dec 2019 08:25 AM
Last Updated : 20 Dec 2019 08:25 AM

‘பாஸ்ட் டேக்’ கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சுங்கச்சாவடிகளை கடக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘பாஸ்ட் டேக்’ கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபிலன் மனோகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை வாக னங்கள் கடந்து செல்ல ‘பாஸ்ட் டேக்’ கட்டண முறை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது சுங்கச்சாவடிகளில் 3 வழித்தடங்களில் ‘பாஸ்ட் டேக்’கட்டண முறையும், 3 வழித்தடங்களில் நேரடியாக கட்டணம் செலுத்தும் முறையும் உள்ளது.

முறைகேடுகளுக்கு வாய்ப்பு

இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப சாலைகளை பயன்படுத்தும்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. ஆனால் ‘பாஸ்ட் டேக்’ முறையில் வங்கி கணக்குகள் மூலமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

நான் ஏற்கெனவே ‘பாஸ்ட் டேக்’ கணக்கு வைத்துள்ளேன். கடந்த நவம்பர் 25-ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு எனது வாகனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளசுங்கச்சாவடியை கடந்து சென்றதாகக் கூறி, எனது கணக்கில் இருந்து ரூ. 55 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்போது என்னுடைய வாகனம் தி.நகரில் உள்ள எனதுவீட்டில்தான் இருந்தது. எனவே‘பாஸ்ட் டேக்’ கட்டண முறையில் நம்பகத்தன்மை கிடையாது என்பதாலும், சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுத்துவிடும் என்பதாலும் மத்திய அரசு கொண்டுவரவுள்ள ‘பாஸ்ட் டேக்’ கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசா ரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x