Published : 19 Dec 2019 08:47 AM
Last Updated : 19 Dec 2019 08:47 AM
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் உள்ள 121 நகராட்சிகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உட்பட 61 நகராட்சித் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது சென்னை உட்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்நடக்கிறது.
மீதமுள்ள 10 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 121நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கான இடங் கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த செப்டம்பர் 16-ம் தேதிஆளுநர் அளித்த ஒப்புதல் அடிப்படையில், இந்த அறிவிக்கை வெளியிடப்படுகிறது. இதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சித் தலைவர் பதவியானது பழங்குடியின பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கப்படுகிறது.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் - ராணிப்பேட்டை நகராட்சி, நாகை- சீர்காழி, திருவாரூர் - திருத்துறைப்பூண்டி, கோவை - வால்பாறை, நீலகிரி -ஊட்டி, குன்னூர், திருநெல்வேலி- சங்கரன்கோவில், வேலூர்- பேர்ணாம்பட்டு, பெரம்பலூர்- பெரம்பலூர் ஆகிய நகராட்சிகளின் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலூர் மாவட்டத்தில் - நெல்லிக்குப்பம், ராணிப்பேட்டை- அரக்கோணம், நீலகிரி - நெல்லியாளம், சேலம் - ஆத்தூர், நரசிங்கபுரம், திருவள்ளூர்- திருவேற்காடு, திருவாரூர் - கூத்தநல்லூர், செங்கல்பட்டு மாவட்டம்- மறைமலை நகர் நகராட்சிகளின் தலைவர் பதவிகள் ஆதிதிராவிடர் ஆண், பெண் என இரு பாலருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பொது பிரிவில் பெண்களுக்கு கீழ்கண்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள் தலைவர் பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம்- ஆம்பூர், வேலூர் - குடியாத்தம், வாணியம்பாடி, திருவண்ணாமலை- திருவதிபுரம், வந்தவாசி, தஞ்சை - கும்பகோணம், நாகை- மயிலாடுதுறை, நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை - அறந்தாங்கி, அரியலூர் - ஜெயங்கொண்டம், அரியலூர், சிவகங்கை - தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம்- கீழக்கரை, திருப்பூர்- தாராபுரம், உடுமலைப்பேட்டை, தென்காசி - கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி - அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி - கோவில்பட்டி, காயல்பட்டினம், கன்னியாகுமரி- குழித்துறை, பத்மநாபபுரம், விருதுநகர்- சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்சி-துறையூர்,ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை, ஆற்காடு, திண்டுக்கல் -பழனி, கோவை- மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, செங்கல்பட்டு- மதுராந்தகம், செங்கல்பட்டு, தேனி - போடிநாயக்கனூர், கம்பம்,பெரியகுளம், கரூர்-குளித்தலை, சேலம் - மேட்டூர், மதுரை- திருமங்கலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், கடலூர் ஆகிய நகராட்சிகளின் தலைவர்கள் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT