Published : 17 Dec 2019 09:59 AM
Last Updated : 17 Dec 2019 09:59 AM
உள்ளாட்சித் தேர்தலுக்கான துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும்27 மற்றும் 30-ம் தேதிகளில்2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை, இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலையும், பொது விதிகளையும் மாநில தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தற்போது தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதற்கு 10 நாட்கள் முன்பாக அதாவது டிச.6-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தத்துக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் அடிப்படையில் துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
ஏற்கெனவே, ஜூன் 30-ம் தேதிவரையிலான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ள நிலை யில், தற்போது டிச.6-ம் தேதி வரையிலான சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவை அடங்கிய துணைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் தினத்தை வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி வாக்குச்சாவடி,மாவட்டம், மாநில அளவில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் தேசிய வாக்காளர் தினத்துக்கு முன்னதாக நடத்தப்பட்டு, தேசியவாக்காளர் தினத்தன்று பரிசுகள்வழங்கப்படுகின்றன. மேலும், ஜன.25-ம் தேதி புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT