Published : 15 Dec 2019 11:14 AM
Last Updated : 15 Dec 2019 11:14 AM
விழுப்புரத்தில் நகைத் தொழிலாளி தன் குடும்பத்தினரைக் கொன்று, தற் கொலை செய்த விவகாரத்தில் மேலும் 12 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் விவகாரம் தொடர்பாக 3 இன்ஸ் பெக்டர்களிடம் துறைரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், சித்தேரிக்கரை, சலாமத் நகரைச் சேர்ந்த அருண் என்ற நகை தொழிலாளி, கடந்த இரு தினங்களுக்கு முன் தன் மனைவி, 3 குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்று, தானும் தற் கொலை செய்து கொண்டார். தான் 3ம் நம்பர் லாட்டரி சூதாட்டத்தில் சிக்கி, பணத்தை இழந்ததால் இந்த கோர முடிவுக்கு வந்ததாக, இறப் பின் கடைசி கட்டத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து அருண் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் உள்ள எளிய தொழிலாளர் கள், குறிப்பாக நகைத் தொழிலாளர் கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த புதிய முறை லாட்டரி சூதாட்டத்தில் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இந்தச் சூதாட்டம் இந்த முறை ஒரு குடும்பத்தையே காவு வாங்கியிருக்கிறது.
உழைப்பை மட்டும் நம்புங்கள்
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
மகாராஷ்டிராவில் காட்டன் சூதாட்டம் என்பது தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் சில ஆண்டு களுக்கு முன்பு நடத்தப்பட்டு, பின்பு தடுத்து நிறுத்தப்பட்டது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்திய மார்க்கெட்டில் பருத்தி விலை நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். அப்படி அறிவிக் கப்படும் விலையை முன் கூட்டியே கணித்து அதன் அடிப்படையில் நடத் தப்படுவதே காட்டன் சூதாட்டம்.
அதேபோல, கேரள மாநில லாட் டரி குலுக்கலில் தினமும் 3 மணிக்கு வெளியிடும் முடிவு எண்ணின் கடைசி 3 இலக்க எண்ணை மட்டும் எடுத்துக் கொண்டு தனிநபர்கள் 3 எண்களுக்கு 15 ஆயிரமும், கடைசி 2 இலக்க எண்களுக்கு ரூ 500ம், கடைசி ஒரு இலக்க எண்ணுக்கு ரூ 50 ம் வழங்குகின்றனர். இந்த மூன்று எண்களைக் கொண்டு நடைபெறும் லாட்டரி சூதாட்டத்தில் படிப்பறிவில்லாதவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது. படித்தவர்க ளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்யப்பட்டு, ஆன் லைன் மூலம் பணம் செலுத்தப்படுகிறது.
இந்த லாட்டரிக்கும், கேரளா வில் முறையாக நடைபெறும் லாட்டரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விழுப்புரம் பகுதியில் இதை தனிநபர்கள் நடத்தியுள்ளனர்.
இவ்விவகாரத்தில் கடந்த இரு தினங்களில் 14 பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 12 லாட்டரி வியாபாரி கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறையற்ற லாட்டரி விற்பனைத் தொடர்பாக ஏற் கெனவே செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், வளத்தி காவல் நிலைய ஆய்வாளர் சுபா ஆகி யோருக்கு துறைரீதியான விளக்கம் கேட்டு குற்ற நமூனா அனுப்பப்பட்டி ருக்கிறது.
தற்போது, விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் ராபின் சனுக்கும் அது அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 3 தலைமை காவலர்கள் ஆயுதப்ப டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.
மேலும் லாட்டரி விற்பனைக்கு துணைபோன அனைத்து நிலை யில் உள்ள அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மோசடி லாட்டரி கும்பலிடம் சிக்காமல் தங்கள் உழைப்பை மட்டும் நம்ப வேண்டும் என்றார்.
சயனைடு விற்பனை: ஆட்சியர் விளக்கம்
இந்த லாட்டரி விவகாரத்தில் சிக்கிய நகைத் தொழிலாளி அருண், தன் குடும்பத்தாருக்கு சயனைட் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் நகை தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் சயனைட் விற்பனை கண்காணிக்கப்படுகிறதா என விழுப்புரம் ஆட்சியர் அண்ணா துரையிடம் கேட்டதற்கு, "ஆல்கஹால் உபயோகிக்க முறைப்படி அனுமதி பெற வேண்டும்.
அதுபோல சயனைட் விற்பனை செய்பவர் அனுமதி பெற்றுள்ளாரா? எந்த அடிப்படையில் நகைத் தொழிலாளர்களுக்கு சயனைட் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT