Published : 15 Dec 2019 10:50 AM
Last Updated : 15 Dec 2019 10:50 AM

கருத்து வேறுபாட்டால் பிரிந்த 17 தம்பதியர் லோக் அதாலத் மூலம் மீண்டும் இணைந்தனர்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் கருத்து வேறு பாடுகளால் பிரிந்த 17 தம்பதியினர் மீண்டும் இணைந்தனர்.

தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி இந்த மக்கள் நீதிமன்றம் நடை பெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஜெ.செல்வ நாதன், திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி தீப்தி அறிவுநிதி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவரும், மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான ராம.பார்த்திபன் ஆகியோர் தலை மையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் மாவட்டத் தில் நிலுவையில் உள்ள 5,553 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப் பட்டு 1,372 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.36.46 கோடி தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

நிலுவையில் அல்லாத 598 வழக்கு கள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 588 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.1.44 கோடி தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மூலம், மொத் தம் 6,151 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 1,960 வழக்கு கள் முடிக்கப்பட்டு, ரூ.37.90 கோடி தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும், இந்த மக்கள் நீதிமன் றத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த 17 தம்பதியினர், பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்பு மீண்டும் இணைந்தனர்.

தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீரிஜா, திருவள்ளூர் சார்பு நீதிமன்ற நீதிபதி அருந்ததி, மாவட்ட முன்சீப் சுபாஷினி, குற்றவியல் நீதிமன்ற நீதித் துறை நடுவர்களான ராதிகா, இளவரசி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.சரஸ்வதி மற்றும் பயிற்சி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x