Last Updated : 14 Aug, 2015 06:07 AM

 

Published : 14 Aug 2015 06:07 AM
Last Updated : 14 Aug 2015 06:07 AM

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் திரளும் பக்தர்கள்: ஒரே நாளில் 14,500 பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரியில் நேற்று ஒரே நாளில் 14,500 பக்தர்கள் திரண்டனர். விடுமுறை தினம் என்பதால் இன்று (ஆக. 14) சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர் மற்றும் தாணிப்பாறை பகுதியில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவில் சஞ்சீவிகிரி எனும் சதுரகிரியில் உள்ள திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும். கடல்மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள இம்மலையில் அருள்மிகு சுந்தர மகாலிங்கமும், சந்தன மகாலிங்கமும் உள்ளன. இவை இரண்டும் சுயம்பு லிங்கங் களாகும். இதில், அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகும். சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.

இத்திருத்தலத்தில் அமைந் துள்ள சந்திரதீர்த்தம், கௌண் டின்ய தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம், குளிராட்டித் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் புனித தீர்த்தங் களாகும். காலங்கி முனிவரால் அமைக்கப்பட்டுள்ள தைலக் கிணற் றுக்கும், காவல் தெய்வங்களாக பைரவ மூர்த்தி, காளியம்மன், பேச்சியம்மன், பிலாவடி கருப் பணசாமிக்கும் இங்கு கோயில்கள் உண்டு.

இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது ஆடி அமாவாசை திருவிழா. இன்று (ஆக. 14) ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுவதையொட்டி, நேற்று சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஆடி அமாவாசையான இன்று காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறவுள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழாவையொட்டி மதுரை, திருமங்கலம், விருதுநகர், திரு வில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந் துகள் இயக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் 14,500 பக்தர்கள் சதுரகிரி மலையில் வந்துள்ளனர்.

சதுரகிரி மலையேறும் பக்தர் கள் அனைவரும் அடிவாரப் பகுதியான தாணிப் பாறையில் நிறுத்திவைக்கப்பட்டு வரிசையாக அனுப்பப்பட்டனர். தாணிப் பாறை யிலும், சதுரகிரி மலையிலும் பக்தர்களுக்கு உதவுவதற்காவும், இடர்பாடுகள் ஏற்பட்டால் மீட்பதற்காகவும் போலீஸாருடன் தீயணைப்பு வீரர்கள், வனத்துறை ஊழியர்களும் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x