Published : 14 Dec 2019 09:05 AM
Last Updated : 14 Dec 2019 09:05 AM
சேலத்தில் பிரபல நகை கடை அதிபரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த இரு நபர்கள் 1.5 கிலோ தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைர நகைகளையும், ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
சேலம் - ஓமலூர் பிரதான சாலை, குரங்குசாவடியில் ஏஎன்எஸ் திவ் யம் நகை கடை குழுமத்தின் பங்குதாரர்கள் பங்களாக்கள் உள் ளன. இந்த பங்களாக்களில் காவ லர்கள், சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டு உள்ளது. ஏஎன்எஸ் திவ்யம் நகை கடை உரிமையாளர் பா சியம் பங்களாவும், இந்த வளாகத் தில் உள்ளது. இவர், குடும்பத் தடன் நேற்று முன் தினம் இரவு பங்களாவின் மாடியில் உள்ள அறையில் தூங்கச் சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, பங்களாவின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் லாக்கரில் இருந்த 1.5 கிலோ தங்கம், வெள்ளி, பிளாட்டி னம், வைர நகைகளையும், ரொக்கம் ரூ.6 லட்சம் ஆகியவை கொள் ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு புகார் அளித் தனர். மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், காவல் துணை ஆணையர்கள் தங்கதுரை, செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
நேற்று அதிகாலை 2 மணிக்கு பங்களாவின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள் ளையர்கள் அதிகாலை 4 மணி வரை, லாக்கரை திறந்து, கொள்ளையடித் துச் சென்றது தெரியவந்தது.
கைரேகையுடன் ஒப்பீடு
கொள்ளை நடந்த பங்களா வுக்கு மோப்ப நாய் ஜூலி வர வழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வழித்தடத்தை கண் டறியும் முயற்சியில் போலீஸார் ஈடு பட்டனர். பங்களாவில் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவிச் சென்றதால், மோப்ப நாய் ஜூலி மோப்பம் பிடிப்பதில் சிரமம் அடைந் தது. மோப்ப நாய் பங்களாவின் பின் புறம் உள்ள தங்க நகை கடையை சுற்றி வந்து நின்றது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த கைரேகை நகலை பிரதி எடுத்தனர். பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் போலீ ஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக் களை போலீஸார் ஆய்வு செய்த தில், நேற்று முன் தினம் இரவு 2 மணிக்கு மர்ம நபர்கள் இருவர் பங்களாவில் நுழைவதும், வீட்டில் இருந்து இரு மூட்டைகளை எடுத்துச் செல்வதும் பதிவாகியுள் ளது. வீட்டுக்கு வெளியே வந்த கொள்ளையரை, அங்கிருந்த காவ லாளி தடுத்தபோது, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக போலீஸார் காவ லாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாக்கரை திறந்தால் அபாய ஒலி எழுப்பக்கூடிய வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், லாக்கரை பூட்டிவிட்டு சாவியை அதிலேயே விட்டுவிட்டதாக போலீ ஸார் விசாரணையில் தெரியவந் துள்ளது. இதுசம்பந்தமாகவும் உரிமையாளரிடம், போலீஸ் அதி காரிகள் விசாரித்து வருகின்றனர்.
3 தனிப்படை அமைப்பு
இதுகுறித்து சேலம் காவல்துறை துணை ஆணையர் செந்தில் கூறும் போது, ‘பங்களாவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு, மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேம ராவில் பதிவான உருவங்கள், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் போல இருப்பதால், அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். மேலும், 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment