Last Updated : 13 Dec, 2019 10:45 AM

1  

Published : 13 Dec 2019 10:45 AM
Last Updated : 13 Dec 2019 10:45 AM

விழுப்புரம் குடும்ப தற்கொலை விவகாரம்: தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் மீண்டும் விற்பனை செய்யப்படுவது எப்படி?

பிரதிநிதித்துவப் படம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டால் 3 குழந்தைகள் மற்றும் மனைவிக்கு சயனைடு கொடுத்துக் கொன்றுவிட்டு நகைத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகள் விற்பனை குறித்த பல தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அதுகுறித்த விவரம்:

கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இத்தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கான எந்த வழிமுறையையும் அரசு செய்யவில்லை. அத்தொழிலாளர்கள் வேறு வழி தெரியாமல் தடை செயய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்கத் தொடங்கினர்.

தற்போது லாட்டரி டிக்கெட்டுகளுக்குப் பதிலாக துண்டுச் சீட்டில் டிடிபி செய்யப்பட்ட தாளிலும், விலாசமில்லாத பில் புக்கில் கார்பன் காப்பி வைத்து லாட்டரி டிக்கெட்டின் பெயர், குலுக்கல் எண், தேதி, சீரியல் எண் போன்றவற்றை அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை 50 ரூபாயில் தொடங்கி 500 ரூபாய்க்கும் மேல் போகிறது. 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி அந்தச் சீட்டுக்கு பரிசு விழுந்தால் கடைசிப் பரிசே 50 சீரியலுக்கு 2500 ரூபாய் கிடைக்கும். யாரிடம் டிக்கெட் வாங்கினோமோ அவரிடமே பரிசு தொகையும் பெற்றுக்கொள்ளலாம். புதிய நபர்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்க முடியாது. இதற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டுமே இந்த டிக்கெட் விற்கப்படும்.

கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இந்த லாட்டரிக்கான முடிவுகளை உங்கள் ஸ்மார்ட் போனில் "கேரளா லாட்டரி ரிசல்ட்ஸ்" என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து டிக்கெட் வாங்கியவர்கள் குலுக்கல் முடிவுகளை பார்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கேட்டபோது, "லாட்டரிக்கு என தனி சட்டப் பிரிவு ஏதுமில்லை. கேம்லிங்கில் இதுவும் தொடர்புடையது. இதற்கான சட்டப்பிரிவு மிகவும் பலவீனமானது. இதில் கைப்பற்றப்படும் ரொக்கப் பணத்தைக் கொண்டே சட்டப் பிரிவுகளை உட்படுத்த முடியும். சட்டத் திருத்தம் செய்தாலே கடுமையான நடவடிக்கையை போலீஸில் எடுக்க முடியும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x