Published : 11 Dec 2019 10:23 AM
Last Updated : 11 Dec 2019 10:23 AM
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஒரத்தநாடு கல்லூரியில் படித்த மாணவி ஜி.ஆனந்தி, பட்டத்துடன் 17 தங்கப் பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்று சாதனை படைத்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 21-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவி யருக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரான கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செயலாளர் கே.கோபால், துணை வேந்தர் சி.பாலச்சந்திரன், பேரா சிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர்.
323 மாணவர்கள், 243 மாண விகள் என மொத்தமுள்ள 566 பேரில் 356 பேர் பட்டங்களை பெற்றனர். மீதமுள்ள 210 பேர் அஞ்சல் மூலமாகப் பெறுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படித்த மாணவி ஜி.ஆனந்தி, 17 தங்கப் பதக்கங்களையும் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசையும் பெற்றார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 474 மதிப்பெண்களையும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,158 மதிப்பெண்களையும் பெற்றி ருப்பது குறிப்பிடத்தக்கது.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய பால்வள வாரியத் தலைவர் திலிப் ரத் பேசியதாவது:
இந்தியாவில் கால்நடைத் துறை பால், முட்டை மற்றும் இறைச்சிக்கு முதுகெலும்பாக மட்டும் இல்லா மல், வாழ்வாதாரம் மற்றும் நிலை யான வேலைவாய்ப்பு உருவாக்கத் தின் ஆதாரமாக உள்ளது.
வெண்மைப் புரட்சி என்ற உலகின் மாபெரும் பால்வள மேம் பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது. 1960 - 70-ம் ஆண்டில் 22 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி 2018 - 19-ல் 187.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மக்கள் தொகைக் கணிப்பின்படி 2050-ம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.
இத்தகைய மக்களுக்கு உண வளித்தல் என்பது மாபெரும் சவா லாக இருக்கும். நாடுமுழுவதும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் மூலம் கோமாரி நோய் மற்றும் கன்று வீச்சு நோயைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் உலகின் மாபெரும் திட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment