Published : 11 Dec 2019 10:06 AM
Last Updated : 11 Dec 2019 10:06 AM
கே.சுரேஷ்
வெங்காயம் இறக்குமதியால் மண், மனித வளத்துக்கு கேடு விளை விக்கக்கூடிய நோய் காரணிகள் ஊடுருவல் இல்லாமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் கண் காணிக்க வேண்டும் என வேளாண் துறை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏற்பட்ட வெங்காய தட்டுபாடு காரணமாக எகிப்து, துருக்கி போன்ற வெளி நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், வெங்காயத்தை இறக்குமதி செய்து தற்காலிக தட்டுப்பாட்டைப் போக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி விடாமல் தட்டுப்பாட்டை நிரந்தரமாகப் போக் கவும் மண்வளத்துக்கும் மனித வளத்துக்கும் கேடு விளைவித்த பார்த்தீனியம் போன்ற விஷச் செடிகள், நோய்க் காரணிகள் ஊடுரு வல் இல்லாமல் இருப்பதையும் மத்திய, மாநில அரசுகள் இத்தருணத்தில் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ் ணன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
வழக்கமாக வெங்காயத்தை அறுவடை செய்யும் விவசாயிகள், மறுமுறை விதைப்பதற்காக குறிப் பிட்ட அளவுக்கு எடுத்து வைத்து விட்டு மீதத்தைத்தான் விற்பனை செய்வர். ஆனால், தற்போது வெங் காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிக விலைக்கு ஆசைப்பட்டு விதைப்புக்கு வைத் திருந்த வெங்காயத்தையும் விற்று விட்டனர். இதேநிலை நீடித்தால் ஆண்டுதோறும் வெங்காயத்தை இறக்குமதி செய்வதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
வெங்காயம் அதிகபட்சம் 3 மாதங்களில் பலன் தரும் பயிர். கார்த்திகை, மார்கழிப் பட்டம் விதைப்புக்கு ஏற்ற தருணம் என்பதால் அரசே மானிய விலையில் விதை வெங்காயத்தையும், அறு வடையாகும் வெங்காயத்துக்கு நியாயமான விலையையும் நிர்ண யித்து அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாகவே உணவுப் பொருள் இறக்குமதியின்போது அதன் மூலம் தீங்கிழைக்கக்கூடிய நோய்க் காரணிகள் ஊடுருவாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 1956-ல் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்ட போது ‘பிஎல் 480’ என்ற பொதுக் கடன் திட்டத்தில் அமெரிக்காவில் இருந்து 1.5 கோடி டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. அப் போதுதான் பார்த்தீனியம் என்ற களைச்செடியும் இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த விஷச் செடியானது மண் வளத்துக்கும், மனிதர்களுக்கும் மிகவும் தீங் கிழைக்கக்கூடியது.
இதை அழிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இறக்குமதி செய்யப்படுவது விதையாக இருந்தால் நுண்ணு யிர் நீக்கம் செய்து நோய்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், உணவுப் பொருட்களை அவ்வாறு செய்ய முடியாது. எனவே, தற்போது இறக் குமதி செய்யப்படும் வெங்காயங் கள் மூலம் களைச்செடிக்கான ஆதாரமோ, நோய்க் காரணிகளோ ஊடுருவக்கூடும்.
இயல்பாகவே, வெங்காயத்தின் இளம் பயிரில் ‘கோழிக்கால் நோய்’ என்ற ஒருவகையான பூஞ்சான நோய் தாக்கும். ஆகையால்தான், விதை வெங்காயத்தை விதைப் புக்கு முன்னதாக பூஞ்சானக் கொல்லி மருந்துகளைக் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது.
எனவே, வெங்காயம் தட்டுப் பாட்டைப் போக்குவதற்காக இறக்குமதி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், எதிர்காலத் தில் பாதிப்புகள் ஏற்படாத வகை யிலும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT